தமிழக சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட்டான தொலைக்காட்சியாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது ரசிகர்களுக்கு அதிக ஆவல் எப்போதும் உண்டு. அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னணி சமையல் நிபுணர்களான செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருவரும் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, வழக்கம்போல் கோமாளிகளாக புகழ், KPY பாலா, மணிமேகலை, சிவாங்கி, சுனிதா, குரேஷி, அதிர்ச்சி அருண், பரத், சரத், ஷீத்தல் ஷெரின் ஆகியோரும் ரசிகர்களை தங்களது நகைச்சுவை நடவடிக்கைகளால் மகிழ்வித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 3-ல் போட்டியாளர்களாக ராகுல் தாத்தா, மனோபாலா, அம்மு அபிராமி, வித்யூலேகா ராமன், தர்ஷன், சந்தோஷ் பிரதாப், கிரேஸ் கருணாஸ், வேட்டை முத்துக்குமார், ரோஷினி ஹரிப்ரியன், சுட்டி அரவிந்த், ஆண்டனி தாசன், ஷ்ருத்திகா அர்ஜுன் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இவர்களில் ஷ்ருத்திகா அர்ஜுன், அம்மு அபிராமி, வித்யூலேகா ராமன் மற்றும் தர்ஷன் ஆகியோர் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், நடந்து முடிந்த வைல்ட் கார்ட் சுற்றில் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வார இறுதியில் குக் வித் கோமாளி சீசன் 3 இறுதி போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.