தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகை சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் விமர்சன ரீதியாகவும் கார்க்கிக்கு திரைப்படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ப்ளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் ப்ரொடக்ஸன்ஸ் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்து சக்தி பிலிம் ஃபேக்டரி வழங்க தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள கார்கி திரைப்படத்தை தமிழகத்தில் சூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கார்கி படத்தை வெளியிட்டது.

இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படத்தில் சாய்பல்லவி உடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷ்ரயான்தி  மற்றும் பிரேம் கிருஷ்ணா அக்கட்டு ஒளிப்பதிவில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இதனிடையே கார்கி திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சாய்பல்லவி. இந்நிலையில் திரையரங்குகளில் ரசிகர்களோடு சாய்பல்லவி இருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ இதோ..
 

.@Sai_Pallavi92 surprise theatre visit during #Gargi 😍 Fans gone crazy seeing her😊

Presented by @2D_ENTPVTLTD
Release by @SakthiFilmFctry
Produced by @blacky_genie@Suriya_offl #Jyotika @Sai_Pallavi92@rajsekarpandian @prgautham83 @sakthivelan_b pic.twitter.com/pNqbXuo49W

— Sakthi Film Factory (@SakthiFilmFctry) July 17, 2022