விரைவில் தந்தை ஆகும் விஜய் டிவி சீரியல் நடிகர் ! குவியும் வாழ்த்துக்கள்
By Aravind Selvam | Galatta | January 05, 2022 12:29 PM IST

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக அசத்தி வருபவர் நவீன் வெற்றி.விஜய் டிவியில் ஒளிபரப்பான நீலி சீரியலில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நவீன்.இந்த தொடரின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்க்க தொடங்கினார் நவீன் வெற்றி.
இதனை அடுத்து விஜய் டிவியில் ஹிட் அடித்த தேன்மொழி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக மாறினார் நவீன் வெற்றி.இவற்றை தவிர நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சில தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்து அசத்தி வருகிறார் நவீன்.இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.இவர் 2020 அக்டோபரில் தனது காதல் மனைவி சௌம்யாவை கரம்பிடித்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.தற்போது தனது மனைவி கர்பமாக இருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் நவீன்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.