தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 திரைப்படத்தில் இணைகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி #தளபதி67 திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் #தளபதி67 திரைப்படத்தின் அறிவிப்புகள் டிசம்பர்(2022) மாதம் முதல் வரிசையாக வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீமன், ஸ்ரீகாந்த், ஷியாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரியில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. 

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே பாடல் வெளிவந்து ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் தனது அட்டகாசமான நடனத்தாலும் இனிமையான குரலாலும் அனைவரையும் மயக்கியுள்ளார். 

இந்நிலையில் தொடர்ந்து Youtube-ல் ட்ரெண்டாகி வரும் ரஞ்சிதமே பாடலின் முழு வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் தமன் அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ரஞ்சிதமே முழு வீடியோ இப்பதான் பார்த்தேன் தியேட்டர்ல சீட்ல யாருமே உட்காரமாட்டீங்க...DOT... உங்களோடு நானும் ஒரு ரசிகனா விஜய் அண்ணா... பின்னி பெடல்!!!!” என குறிப்பிட்டு இசையமைப்பாளர் தமன்.S பதிவிட்டுள்ளார். அவரது அந்த பதிவு இதோ…
 

#Ranjithamey full Video Ippo dhannn Paathennn. ❤️ theatre la Seat 💺 laaa yaaruu maee okkaramatttinggaaa 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 DOT 💪🏼🚀🚀🚀🚀🚀🚀 ungalloodaaa nannummmm orruuu rasigaaanna 🫶#Anna @actorvijay 💃💃💃💃💃💃💃💃💃

Pinniiiii peddalllllll 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

— thaman S (@MusicThaman) November 8, 2022