தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை அனுஷ்கா தமிழில் தளபதி விஜய், அஜித் குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்தி, ஆர்யா என முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.

குறிப்பாக பாகுபலி திரைப்படங்களுக்கு பிறகு இந்திய அளவில் அனைவரது மனதிலும் இடம் பிடித்த நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீசான திரைப்படம் SILENCE(நிசப்தம்). இதனை அடுத்து இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு அனுஷ்காவின் அடுத்த திரைப்படம் வெளிவர தயாராகி வருகிறது.

நடிகை அனுஷ்காவின் திரைப்பயணத்தில் 48வது திரைப்படமாக தயாராகும் இத்திரைபடத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் P.மகேஷ் பாபு இயக்குகிறார். முன்னதாக அனுஷ்கா நடித்த மிர்ச்சி மற்றும் பாகமதி ஆகிய திரைப்படங்களை தயாரித்த UV கிரியேஷன்ஸ் நிறுவனம் மூன்றாவது முறையாக அனுஷ்கா நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. முன்னணி ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிசெட்டி அனுஷ்காவுடன் இணைந்து இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அனுஷ்காவின் பிறந்த நாளான நேற்று நவம்பர் 7ஆம் தேதி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் #அனுஷ்கா48 படக்குழுவினர் அனுஷ்காவின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சமையல் கலைஞராக அன்விதா ராவலி செட்டி கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ள இத்திரைப்படத்தின் அந்த Special போஸ்டர் இதோ…
 

Happy Birthday 🎂 Sweety ❤️

Introducing 'Anvitha Ravali Shetty' aka our beautiful actress @MsAnushkaShetty @NaveenPolishety #MaheshBabuP #NiravShah @UV_Creations #ProductionNo14 #Anushka48 #NaveenPolishetty3 pic.twitter.com/OmLLhGoawD

— UV Creations (@UV_Creations) November 7, 2022