பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இசை மீது கொண்ட ஆர்வத்தினால் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர் தமன்.தமிழ்,தெலுங்கு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தெலுங்கில் இவர் இசையமைக்கும் படங்கள் பெரிய வரவேற்பை பெறும்.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இவரது பாடல்கள் செம ஹிட் அடித்து மில்லியன்,பில்லியன் என பார்வையாளர்களை அள்ளி வருகிறது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ்,தளபதி விஜயின் வாரிசு,மகேஷ் பாபுவின் SSMB 28 என பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் தமன் அவ்வப்போது சில தகவல்களையும் பகிர்ந்து வருவார்.சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் தெலுங்கு பிரஸ் மீட் தற்போது நடைபெற்று வருகிறது.அதில் பேசிய தமன் முக்கிய அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ப்ரின்ஸ் குறித்த சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்த தமன் , ஒளிப்பதிவாளர் மனோஜ் மற்றும் நான் இணைந்து ஒரு டெக்னாலஜியை ஆரம்பித்தோம் , இப்போது பல பெரிய படங்களில் பணியாற்றி வருகிறோம்.இப்போது நாளை கூட தளபதி விஜயின் வாரிசு பாடல் ஷூட்டிங் நடைபெறவுள்ளது.இந்த பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று தமன் முதல்முறையாக பிரின்ஸ் பிரஸ்மீட்டில் அறிவித்துள்ளார் தமன்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.