சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக அசத்தி வருபவர் அணு சுலாஷ்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார் அணு.இதனை தொடர்ந்து ஆண்டாள் அழகர் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார்.

இதனை அடுத்து மெல்ல திறந்தது கதவு,கல்யாணம் முதல் காதல் வரை,விதி என முன்னணி சேனல்களில் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார் அணு.முக்கிய வேடங்கள் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தார் அணு.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரிய ஹிட் தொடரான பாண்டவர் இல்லம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் அணு.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

சில வாரங்களுக்கு முன் தான் கர்பமாக இருப்பதை அறிவித்த அணு , தற்போது தனது வளைகாப்பு விழாவில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.விரைவில் அம்மாவாக இருக்கும் அணுவிற்கு பல பிரபலங்களும்,ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.