இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் அட்லீ.ராஜா ராணி படத்தின் மூலம் ரொமான்டிக் இயக்குனராக அறிமுகமான அட்லீ அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல்,பிகில் என்று படங்களை இயக்கினார் அட்லீ.

மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.கமர்சியல் மாஸ் மசாலா டைரக்டர் ஆக அட்லீ வளந்துள்ளார்.இதனை அடுத்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ .அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் இயக்குனர் அட்லீ நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல முக்கிய பிரபலங்களும் கலந்துகொண்டனர்.தற்போது அட்லீ இரு முக்கிய நடிகர்களுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.அட்லீ தளபதி விஜய் மற்றும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் உடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

ஷாருக்கான் இந்திய சினிமாவை  எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் முன்னணி நடிகராக அவதரித்தார்.உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமையை பெற்றவர் இவர்.

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவரது படங்கள் வெளியானால் திரையரங்குகள் திருவிழா போல காட்சியளிக்கும்.தமிழ் நடிகர்களின் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்ற முக்கிய நடிகராக விஜய் விளங்குகிறார்.இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் ஒரே புகைப்படத்தில் இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் தயாராகும் ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற ஒரு தகவலும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இந்த தகவல் உறுதியாகிவிடும் என்பது போல இந்த சந்திப்பு இருப்பதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.