தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகராகவும், பாக்ஸ் ஆபீஸ் மன்னனாகவும், அனேக சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் திகழும் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரித்துள்ள படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், VTV கணேஷ் ஆகியோருடன் இணைந்து மிரட்டலான வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். 

ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் பீஸ்ட் படத்திற்கு இசையமைக்கிறார்.ப்ளாக் காமெடி - ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஸ்டன்ட் இயக்குனர்களாக அன்பறிவு பணியாற்றி வருகின்றனர். தளபதி விஜய் தனது படப்பிடிப்பை நிறைவு செய்ததை அடுத்து இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை  தெரிவிக்கும் விதமாக தளபதி விஜய்யின் வெறித்தனமான புதிய போஸ்டரை பீஸ்ட் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் 2022 ஏப்ரலில் பீஸ்ட் திரைப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே தொடர்ந்து பாடல், டீசர், ட்ரைலர் உள்ளிட்ட அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.