இயக்குனர் S.S.ராஜமௌலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக வருகிற ஜனவரி 7 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது RRR திரைப்படம். DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து மொழிகளில் வெளிவரும் RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
முன்னதாக வெளிவந்த RRR படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்க்காண பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறும் RRR சிறப்பு நிகழ்ச்சியில் இயக்குனர் S.S.ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் பங்கு பெற்றனர். பிரபல தொகுப்பாளர் டிடி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் தளபதி விஜய் குறித்து பேசும் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. இந்த வீடியோவில், 

“விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் அன்பான மனிதர்… சூப்பர் ஸ்டாருக்கு உண்டான எந்த பிரதிபலிப்பும் வெளியில் காட்டாமல் இருப்பவர்… கடைசியாக மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு அவருடன் தொலைபேசியில் உரையாடினேன்… அவர் ஒரு அற்புதமான மனிதர் ... சூப்பர் ஸ்டார் என்பதை தலைக்கு ஏற்றாமல் ஒரு சாதாரண மனிதராக இருப்பது மிகவும் கடினம்… அன்பான நண்பர்.. எனக்கு சீனியர்.. நண்பருக்கும் மேல் அவர் எனக்கு ஒரு வழிகாட்டி.. நடனம் குறித்து பல முறை அவருடன் பேசி இருக்கிறேன்… அவரது நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகன்.” 

என பேசியுள்ளார். விஜய் குறித்து ஜூனியர் என்டிஆர் பேசும் அந்த வீடியோ இதோ…