விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் நடுவானில் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

American flight

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. 

இந்நிலையில் உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க தினசரி கேஸ்கள் 16 லட்சம் என்ற அளவில் உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 5.6 லட்சம் கேஸ்கள் நேற்று பதிவாகி உள்ளது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில்தான் பல்வேறு நாடுகளில் விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த மரிசா போட்டியோ என்ற பெண் நடுவானில் கொரோனா பாசிடிவ் ஆகியுள்ளார். மிச்சிகனில் விமானம் ஏறிய அவருக்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. தாங்காத இருமல் மற்றும் வறண்ட தொண்டை அந்த பெண்ணுக்கு இருந்துள்ளது. இதனால் அவருக்கு தனக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர் தனது லக்கேஜில் ராபிட் டெஸ்ட் கிட் வைத்துள்ளார். இதனால் அதை எடுத்துக்கொண்டு உடனே ரெஸ்ட் ரூமில் கொரோனா சோதனை செய்துள்ளார். ராபிட் கிட் என்பதால் அவருக்கு உடனே ரிசல்ட் வந்துள்ளது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளியே வந்த அவர் விமான பணிப்பெண்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தனிமைப்படுத்த முயன்று உள்ளனர். ஆனால் அவரை தனிமைப்படுத்தும் அளவிற்கு காலியான வரிசை கொண்ட இருக்கைகள் இல்லை. அவர் தனது இருக்கையிலும் சென்று அமர முடியாது. இதனால் அந்த பெண்மணி மரிசா போட்டியோ தன்னை ரெஸ்ட் ரூமில் தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். நான் ரெஸ்ட் ரூமில் இருக்கிறேன். என்னால் மற்றவர்கள் சிரமப்பட வேண்டாம். நான் உள்ளேயே இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அவர் ரெஸ்ட் ரூமில் அமரவைக்கப்பட்டார்.

மேலும் இது குறித்து மரிசா போட்டியோ அளித்துள்ள பேட்டியில் நான் விமானத்தில் ஏறும் முன் டெஸ்ட் எடுத்துவிட்டுதான் ஏறினேன். நெகட்டிவ் என்று வந்தது. ஆனாலும் தொடர்ந்து எனக்கு அறிகுறி இருந்தது. இதனால் நான் என்னை மீண்டும் டெஸ்ட் செய்தேன். இதில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அதனால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.