தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜயின் மேனேஜரான ஜெகதீஷ் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்தை ஜெகதீஷ் இணைந்து தயாரித்திருந்தார்.

இதையடுத்து தனது The ROUTE தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். தயாரிப்பாளர் ஜெகதீஷின் The Route மற்றும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து மலையாளத்தில் தயாரிக்கும் சேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தை இயக்குனர் மனோ.C.குமார் எழுதி இயக்குகிறார்.

பிரபல இளம் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கும் ஷேஷம் மைக்கில் பாத்திமா திரைப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைக்கிறார். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் சேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்திற்கு கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் ஷேஷம் மைக்கில் பார்த்திமா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

Feeling Elated n Emotional as I announce our first production venture from @TheRoute. It’s a double delight to associate with @kalyanipriyan 🤗 directed by @manuckumar4

A @HeshamAWMusic Musical 🎵

DOP @dop_santha 😍@Aiish_suresh @PassionStudios_ #SeshamMikeilFathima pic.twitter.com/XSqoQwpLz5

— Jagadish (@Jagadishbliss) September 11, 2022