சினிமாவை நேர்மையாக நேசிக்கும் கலைஞனாக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வரும் நடிகர் சூர்யா கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் படத்தில் கடைசி சில நிமிடங்களில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்தார்.

சமீபத்தில் நடிகர் மாதவன் இயக்கி நடித்து வெளிவந்த ராக்கெட்ரி திரைப்படத்திலும் கௌரவ வேடத்தில் நடித்திருந்த சூர்யா, அடுத்து சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன்  இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார்.

முன்னதாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பிரம்மாண்டமான புதிய #SURIYA42 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில், சில தினங்களுக்கு முன்பு அதிரடியான மோஷன் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் வணங்கான்.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், ஜீவி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் வணங்கான் திரைப்படத்தின் பாடல்கள் பதிவு தற்போது நடைபெற்று வருவதாக ஜீவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஜீவி பிரகாஷ் குமாரின் அந்த பதிவு இதோ…
 

#vanangaan songs recording on progress 🔥🔥🔥 … @Suriya_offl @rajsekarpandian #directorbala

— G.V.Prakash Kumar (@gvprakash) September 11, 2022