வைரலாகும் சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு மேக்கிங் வீடியோ!
By Anand S | Galatta | September 11, 2022 14:15 PM IST
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிலம்பரசன்.TR அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் AGR எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் - சிலம்பரசன்TR வெற்றிக் கூட்டணியில் 3வது படமாக வெந்து தணிந்தது காடு தயாராகியுள்ளது.
சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு, சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து சிலம்பரசன்TRன் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோ இதோ…