தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக அடுத்தடுத்து தனது பிளாக்பஸ்டர் திரைப்படங்களால் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். அடுத்ததாக மீண்டும் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் #தளபதி67 திரைப்படம் தயாராகவுள்ளது.

இந்த ஆண்டில் உலகநாயகன் கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு #தளபதி67 திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #தளபதி67 திரைப்படத்தின் அப்டேட்க்களுக்காக அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில்  டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொரு அறிவிப்புகளாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடைய பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு(2022) பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. இதே பொங்கல் வெளியீடாக அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீசாக இருப்பது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் முறையாக தளபதி விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்ற இசையமைப்பாளர் தமன் இசையில், வாரிசு திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே பாடல் நேற்று (நவமபர் 5) வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் Youtubeல் 18.5 மில்லியன் பார்வையாளர்களையும் 1.3 லைக்குகளையும் கடந்து சாதனை படைத்துள்ளது.
 

#Ranjithame storms the internet with 18.5M real-time views in 24 hours 🔥

▶️ https://t.co/Q56reRe9tc#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani @TSeries#RanjithameSong #Varisu #VarisuPongal pic.twitter.com/1NUsMwBcL3

— Sri Venkateswara Creations (@SVC_official) November 6, 2022