ஒட்டுமொத்த இந்திய திரை உலகமே வியந்து பார்க்கும் ஒப்பற்ற கலைஞனாக தொடர்ந்து சினிமாவையும் ரசிகர்களையும் மதித்து அனைவரது ரசனையையும் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள். அந்த வகையில் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் சாதனைகள் படைத்தது.

இதனை அடுத்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். சில காரணங்களால் தடைப்பட்டிருந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து தயாராகும் திரைப்படத்தை இயக்குவது யார்..? என்று தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கும் சரியான விருந்து வைக்கும் வகையில், நாயகன் திரைப்படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் KH234 திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து வழங்கும் KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நாளை நவம்பர் 7ஆம் தேதி உலகநாயகன் தனது 68வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் பரிசாக தற்போது KH234 படத்தின் அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

Here we go again! #KH234
பயணத்தின் அடுத்த கட்டம்!
#ManiRatnam @Udhaystalin @arrahman #Mahendran @bagapath @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM pic.twitter.com/ATAzzxAWCL

— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2022