தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் அடுத்த நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஜனவரி 2ஆம் தேதி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியிருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அதிரடி அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடைய முதல் முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ள வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட வருகிற பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

முன்னதாக அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கும் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை ஜனவரி 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் வாரிசு ட்ரெய்லர் வெளியாகும் அதே சமயத்தில் நாளை தெலுங்கு வெர்ஷன் வாரசுடு ட்ரெய்லரும் வெளியாக இருப்பதாக தற்போது தகவல்கள் வெளி வருகின்றன.

முதல்முறையாக தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வாரிசு (வாரசுடு) திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்நிலையில், இதுவரை வந்த தளபதி விஜயின் திரைப்படங்களிலேயே வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் தான் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.