அஜித் நடித்துள்ள 'துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் நிலையில், அப்படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘துணிவு’. ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அஜித்துடன், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு, விஜய் வேலுகுட்டி. சண்டைக்காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைத்துள்ளார். கலை இயக்குநராக மிலன் பணியாற்றியுள்ளார். மேலும் கல்யாண் இப்படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். துணிவு படத்திலிருந்து இதுவரை 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா' மற்றும் 'கேங்க்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியுள்ளன.

வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அஜித்தை ரசிகர்கள் விரும்பும் பரிமாணத்தில் ஸ்டைலாகக் காட்சிப்படுத்தியிருந்த இதன் டிரெய்லர், யூடியூபில் 38 மில்லியன் பார்வையாளர்களை இதுவரை கடந்துள்ளது.

டிரெய்லரில் காணப்படும் துள்ளலான அஜித்தை படம் நெடுகிலும் காணமுடிந்தால் ரசிக்கத்தக்கதாக இருக்கும் என்பது அஜித் ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சுவாரியரின் ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதனிடையே, துணிவு பத்திற்கு தணிக்கை குழுவினர் அளித்துள்ள சான்றிதழ் தரம் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதன்படி துணிவு படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் 13 இடங்களில் காட்சித் திருத்தம், நீக்கம், ஒலிநீக்கம் உள்ளிட்டவற்றைச் செய்து தரச்சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தின் நீளம் 145 நிமிடங்கள் 48 நொடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் புதிய Glimse புகைப்படங்கள் அடங்கிய பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை நெட்டிசன்கள் பலரும் வேகமாகப் பகிர்ந்துவருகின்றனர். அந்த புதிய புகைப்படங்கள் அடங்கிய பதிவு உங்கள் பார்வைக்கு.  
 

Exclusive Stills Of #AK From #Thunivu #Ajith #NoGutsNoGlory #Ajithkumar #ThunivuPongal #ThunivuPongal2023 #Gangstaa #ChillaChilla #Ajithkumar𓃵 @BoneyKapoor @Udhaystalin @SureshChandraa @BayViewProjOffl @ZeeStudios_ @RedGiantMovies_ @mynameisraahul @GhibranOfficial pic.twitter.com/DYnfbwhyoP

— Galatta Media (@galattadotcom) January 3, 2023