“நான் மகிழ்ச்சி அடைகிறேன்..” விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தளபதி எழுதிய கடிதம்..!

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு கடிதம் எழுதிய தளபதி விஜய் வைரல் பதிவு உள்ளே – Vijay write letter to Vijay makkal iyakkam members | Galatta

இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராகவும் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டாகவும் வலம் வருபவர் தளபதி விஜய். ஒவ்வொரு படத்திற்கு உலகளவில் தனது மார்க்கெட்டை உயர்த்தி இன்று திரைத்துறையில் முக்கியமான நடிகராக இருந்து வருகிறார்.. இந்த ஆண்டு பொங்கலையொட்டி விஜய் அவர்களது நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் உலகளவில் வசூல் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறை கூட்டணி அமைக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் லியோ திரைப்படம் வரும் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி உலகமெங்கும்  வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இந்திய சினிமா ரசிகர்களின் எதிர்பார்புகளை கொண்டு உருவாகும் லியோ திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் ஆவல் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து தளபதி விஜயின் 68 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அறிவிப்பின்படி ஏ ஜி எஸ் தயாரிப்பில் ‘தளபதி 68’ திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். அப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். தொடர் அப்டேட்டுகளினால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் தற்போது இருந்து வருகின்றனர்.

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வலுவாக அதிகரித்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அதே ரசிகர்கள் மூலமாக பல்வேறு சமூக செயல்பாடுகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். சமீபத்தில் தளபதி விஜய் அவர்கள் அவரது ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழகமெங்கும் 234 தொகுதி வாரியாக கல்வி விருது விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடித்தி கல்வி ஊக்கத்தொகை வழங்கனார். இந்த நிகழ்வு அனைவரது பாராட்டுகளை பெற்று கவனம் ஈர்த்தார். இதனுடன் அவரது பிறந்தநாளை யொட்டி தளபதி விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கம் மூலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல நல தொண்டு செயல்களை செய்து வந்தனர்.

தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் தமிழகத்தில் தொடந்து சிறப்பாக செயல்படுத்தி வரும் மக்கள் இயக்க நிர்வாகிகளை தளபதி @actorvijay அவர்கள் (28/04/23) அன்று நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.!@TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss #ThalapathyVijayMakkalIyakkham #TVMIpic.twitter.com/O0tUyuBPNM

— Bussy Anand (@BussyAnand) June 30, 2023

இச்செயல் பொதுமக்களிடையே நன்மதிப்பை பெற்று அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் தமிழகத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வரும் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் அதனுடன் மக்கள் இயக்கத்தினருக்கு அவரே கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “கடந்த ஜூன் 22  அன்று எனது பிறந்த நாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்று இன்று என்றும்
தளபதி அவர்களுக்கு நன்றி.. pic.twitter.com/dAe14Ad39h

— ECR.P.Saravanan (@EcrPSaravanann) June 30, 2023

தற்போது தளபதி விஜயுடன் மக்கள் இயக்கத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் இந்த கடிதமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

“என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னன்..” படக்குழுவினரை வாழ்த்திய உலகநாயகன் கமல் ஹாசன்.!
சினிமா

“என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னன்..” படக்குழுவினரை வாழ்த்திய உலகநாயகன் கமல் ஹாசன்.!

மணிரத்னம், ராம் சரண், ஜூனியர் என்டிஆர்.. ஆஸ்கர் 2023 உறுப்பினர் குழுவில் இணைந்த இந்திய பிரபலங்களின் பட்டியல் உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

மணிரத்னம், ராம் சரண், ஜூனியர் என்டிஆர்.. ஆஸ்கர் 2023 உறுப்பினர் குழுவில் இணைந்த இந்திய பிரபலங்களின் பட்டியல் உள்ளே..

“இருள் ஆளப்போகிறது!”- அருள்நிதியின் ஹாரர் திரில்லர் ட்ரீட் டிமான்டி காலனி 2... ஷூட்டிங் அப்டேட் உடன் வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

“இருள் ஆளப்போகிறது!”- அருள்நிதியின் ஹாரர் திரில்லர் ட்ரீட் டிமான்டி காலனி 2... ஷூட்டிங் அப்டேட் உடன் வந்த புது GLIMPSE இதோ!