“அந்த வீடு செய்ய ரொம்ப கஷ்டபட்டோம்” மாமன்னன் படத்தின் கலை இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – முழு நேர்காணல் உள்ளே..

மாமன்னன் பட செட் குறித்து கலை இயக்குனர் குமார் பகிர்ந்த தகவல் வீடியோ உள்ளே - Art director kumar about maamannan movie set | Galatta

நேற்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’ இயக்குனர் மாரி செல்வராஜின் மூன்றாவது திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில்ம் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வெளியிடும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஏ ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்திருப்பார். திரைப்படத்தின் அறிவிப்பிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த மாமன்னன் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் மாமன்னன் பட கலை இயக்குனர் குமார் கலந்து கொண்டு மாமன்னன் படம் உருவான விதம் மற்றும் அப்படத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் மாமன்னன் படத்தின் டிரைலர் வெளியான போதும் தற்போது திரைப்படம் வெளியான போதும் ரசிகர்களால் குறிப்பிடப் பட்டு பேசப்படும் விஷயமாக வடிவேலு வீட்டு செட் இருந்து வருகிறது. அத்தகைய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த செட் குறித்து கேட்கையில், கலை இயக்குனர் குமார் பகிர்ந்து கொண்டவை, “இந்த வீடு முதல் முறைய 3D ல பண்ணா கொடுத்தோம். ஒரு பழைய வீடு அதை வடிவேலு பராமரிக்குறாரு பேசினோம். அப்பறம் சேலத்திற்கு உள்ள போய் இது போல வீடு இருக்கா னு பார்த்தோம்.  வெளிய பார்க்க ஒரு வீடு கிடைச்சது.‌ அதை வெச்சுதான் பண்ணோம். வீட்டுக்குள்ள காட்சிக்கு ஏத்தா மாதிரி வேலை பண்ணோம். 3D ல் ஒண்ணு பண்ணுவோம் அப்பறம் படபிடிப்புக்கு போனதும் நிறைய மாத்துனோம்.” என்றார் பின்  தொடர்ந்து,

“மாமன்னன் படத்தில் வரும் வீடு பண்ண ரொம்ப கஷ்டப்பட்டோம். அந்த நேரத்துல பெரிய மழை. தினம் மழை வரும். அதனால வீட்டு மேற்கூரையில ஒழுக ஆரம்பிச்சுடுச்சு.. அதை மறைச்சு செட் பண்ணவே நாள் ஆகிடும். இந்த வீடு முடிக்க 18 நாள் ஆச்சு.. ஆள் அதிகரிச்சு 18 நாள் ல அந்த வீடு கட்டி முடிச்சோம். படம் முடிஞ்சு அந்த செட் கலைக்கும் போது கஷ்டமாதான் இருந்துச்சு. நான் எப்பவும் ஒரு செட் போட்டதும் அங்க நின்னு போட்டோ எடுத்துட்டு கிளம்பி வந்துடுவேன். பிரிக்கும் போது இருக்க மாட்டேன். இந்த செட் மட்டும் 85 லட்சம் செலவு பண்ணி இதை பண்ணோம். பொருட்கள், பெயிண்ட் எல்லாம் சேர்த்து. அந்த வீட்டுக்குள்ள இருக்க எல்லா விஷயமும் வரைஞ்சி இயக்குனரிடம் காட்டி தான் பண்ண ஆரம்பிச்சோம்.

அப்பா அம்மா பையன் இருக்க வீட்டிவ் என்னென்ன விஷயம் இருக்குமோ அதைதான் குறைச்சு பண்ணிருக்கோம். நானே குறைச்சு சிம்பிளா பண்ணன். ஆனா மாரி செல்வராஜ் அதிலையும் நிறைய தூக்கிட்டாப்ள.." என்றார் கதை இயக்குனர் குமார்.

மேலும் கலை இயக்குனர் குமார் மாமன்னன் படத்தில் பயன்படுத்தபட்ட சட்டமன்ற சபா நாயகர் நாற்காலி, உதயநிதி வைத்திருந்த வாள் உள்ளிட்ட பல விஷயங்களின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே..

மணிரத்னம், ராம் சரண், ஜூனியர் என்டிஆர்.. ஆஸ்கர் 2023 உறுப்பினர் குழுவில் இணைந்த இந்திய பிரபலங்களின் பட்டியல் உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

மணிரத்னம், ராம் சரண், ஜூனியர் என்டிஆர்.. ஆஸ்கர் 2023 உறுப்பினர் குழுவில் இணைந்த இந்திய பிரபலங்களின் பட்டியல் உள்ளே..

“இருள் ஆளப்போகிறது!”- அருள்நிதியின் ஹாரர் திரில்லர் ட்ரீட் டிமான்டி காலனி 2... ஷூட்டிங் அப்டேட் உடன் வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

“இருள் ஆளப்போகிறது!”- அருள்நிதியின் ஹாரர் திரில்லர் ட்ரீட் டிமான்டி காலனி 2... ஷூட்டிங் அப்டேட் உடன் வந்த புது GLIMPSE இதோ!

பிரதீப் குமாரின் மயக்கும் குரலில் ‘மரகத மாலை’.. சித்தார்த்தின் 'டக்கர்' படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ சாங்..!
சினிமா

பிரதீப் குமாரின் மயக்கும் குரலில் ‘மரகத மாலை’.. சித்தார்த்தின் 'டக்கர்' படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ சாங்..!