உலகளவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ - அட்டகாசமான அறிவிப்புடன் வைரலாகும் வீடியோ..

பிரம்மாண்டமாக வெளியாகும் சிவகார்த்திகேயனின் மாவீரன் வைரல் வீடியோ உள்ளே - Sivakarthikeyan overseas announcement video viral | Galatta

தொலைக்காட்சியில் மூலம் பிரபலமாகி பின் தமிழ் திரைப்படங்களில் களமிறங்கி இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது முந்தைய திரைப்படங்களான டாக்டர், டான் ஆகிய படங்களின் சூப்பர் ஹிட் பிறகு திரையுலகில் வசூல் நாயகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். அதன்படி தற்போது சிவகார்த்திகேயன் ரங்கூன் பட இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் ‘SK21’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி பிரம்மாண்ட SciFi திரைக்கதையில் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ வெளியாகவுள்ளது.

இதன்டையே சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மாவீரன்’. யோகி பாபுவின் காமெடி கலந்த சமூக பிரச்சனையை பேசிய ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார், மேலும் இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். பரத் ஷங்கர் இசையில் முன்னதாக வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

மாவீரன் படத்தின் முதல் பார்வை தொடங்கி இன்று வரை ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வைரலாகி வருகிறது. அதன்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மத்தியில் உருவாகியிருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14 ல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமையும் என்று பேசப்படுகிறது. அதனுடன் மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு (Pre-release) நிகழ்வு வரும் ஜூலை 2 ம் தேதி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மாவீரன் படக்குழு அட்டகாசமான அப்டேட்டினை வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் தற்போது உலகளவில் பிரம்மாண்டமான ரிலீஸாக வெளிவரவுள்ளது. அதன்படி பிரபல வெளிநாட்டு வினியோகஸ்த நிறுவனம் அஹிம்சா என்டர்டெயின்மண்ட் மற்றும் ஹம்சினி என்டர்டெயின்மண்ட் ஆகிய நிறுவனங்கள் பெருமபாலான வெளிநாட்டு ரிலீஸாக வெளியிடவுள்ளது.

The largest overseas release for @Siva_Kartikeyan with #Maaveeran is set for next month. SK fans.. ready? 🔥🥁

Entire overseas release by #AhimsaEntertainment & @Hamsinient 🙌@vithurs @deepa_iyer_ @madonneashwin @AditiShankarofl @ShanthiTalkies @iamarunviswa @cineworldpic.twitter.com/RHqaE7EEny

— Ahimsa Entertainment (@ahimsafilms) June 29, 2023

சிவகார்த்திகேயன் திரைபயணத்தில் உலகளவில் பல்வேறு பகுதிகளில் வெளியாகும் மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய ரிலீஸாக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.  

We are glad to be partnering with @Hamsinient & @ahimsafilms for #Maaveeran overseas release!🌎#MaaveeranFromJuly14th #Mahaveerudu @Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @bharathsankar12 @iamarunviswa @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabupic.twitter.com/xpNRAlLcK9

— Shanthi Talkies (@ShanthiTalkies) June 29, 2023

“இருள் ஆளப்போகிறது!”- அருள்நிதியின் ஹாரர் திரில்லர் ட்ரீட் டிமான்டி காலனி 2... ஷூட்டிங் அப்டேட் உடன் வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

“இருள் ஆளப்போகிறது!”- அருள்நிதியின் ஹாரர் திரில்லர் ட்ரீட் டிமான்டி காலனி 2... ஷூட்டிங் அப்டேட் உடன் வந்த புது GLIMPSE இதோ!

பிரதீப் குமாரின் மயக்கும் குரலில் ‘மரகத மாலை’.. சித்தார்த்தின் 'டக்கர்' படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ சாங்..!
சினிமா

பிரதீப் குமாரின் மயக்கும் குரலில் ‘மரகத மாலை’.. சித்தார்த்தின் 'டக்கர்' படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ சாங்..!

சினிமா

"தனுஷ் ரசிகர்களே தயாரா?"- அதிரடியான கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!