மணிரத்னம், ராம் சரண், ஜூனியர் என்டிஆர்.. ஆஸ்கர் 2023 உறுப்பினர் குழுவில் இணைந்த இந்திய பிரபலங்களின் பட்டியல் உள்ளே..

ஆஸ்கர் உறுப்பினர் பட்டியலில் இடம் பிடித்த இந்திய பிரபலங்கள் விவரம் உள்ளே - List of Indian Oscars academy 2023 members | Galatta

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக உலக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விருது ஆஸ்கர். உலக நாடுகளில் இருக்கும் ஒவ்வொரு திரைக்கலைஞர்களும் சென்றடைய விரும்பும் மேடையாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சமீப காலமாக தான் இந்திய கலைஞர்களுக்கு அந்த கனவு நினைவாகி வருகிக்றது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஒரு சில படங்கள் மட்டும் தான் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெரும். இதுவரை சத்யஜித் ரே, ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் இந்திய சார்பில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதினை வென்றனர். இந்த நிகழ்வு இந்திய ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப் பட்டது என்பது குறிப்பிடத்தக்ககது.

இந்நிலையில் 2023 க்கான ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியிலை வெளியிட்டுள்ளது ஆஸ்கர் குழுமம். தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 398 பேருக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்ற இந்திய கலைஞர்களின் பட்டியல் பின்வருமாறு..

இயக்குனர் மணிரத்னம்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

ராம் சரண்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

ஜூனியர் என்டிஆர்  

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

ஒளிப்பதிவாளர் கே கே செந்தில் குமார் - ஆ ர் ஆர் ஆர்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி - ஆர் ஆர் ஆர்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

பாடலாசிரியர் சந்திரபோஸ் - ஆர் ஆர் ஆர்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

புரொடக்ஷன் வடிவமைப்பாளர் சாபு சிரில் - ஆர் ஆர் ஆர்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

தயாரிப்பாளர் கரண் ஜோஹர் – லஞ்ச் பாக்ஸ்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

தயாரிப்பாளர் சித்தார்த் ஆர் கபூர் - தங்கல்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

ஆவண பட இயக்குனர் இயக்குனர் ஷானுக் சென் – ஆல் தட் பிரீத்ஸ்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

இயக்குனர் சைத்தன்யா தம்ஹானே – கோர்ட்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

ஒளிப்பதிவாளர் ஆந்த்ரிஜ் பரேக் – தி ஜூ கீப்பர் வைப்

arulnithi in demonte colony 2 movie shooting wrapped ajay gnanamuthu

மற்றும் இவர்களுடன் இசையமைப்பாளர் ரபீக் பாட்டியா, VFX ஹரீஷ் ஹின்கோரணி , VFX சனத் மற்றும் நிர்வாக இயக்குனர் பாலா பஜாரியா ஆகியோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் பெரும்பான்மையான கலைஞர்கள் ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து இடம் பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.  இந்த பட்டியலில் குறிப்பாக இயக்குனர் மணிரத்னம் இடம் பெற்றுள்ளார். பல தசாப்தங்களாக திரைத்துறையில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பயணித்து வரும் மணிரத்னம் தற்போது ஆஸ்கர் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருப்பதை அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். இவர் இயக்கத்தில் வெளியான நாயகன் மற்றும் அஞ்சலி திரைப்படங்கள் இந்திய திரைப்படங்கள் சார்பில் ஆஸ்கரில் நுழைந்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த உறுப்பினர் குழுவில் ஏ ஆர் ரஹ்மான், கஜோல், சூர்யா உள்ளிட்டோர் சிலர் இடம் பெற்றுள்ளனர். இதில் நடிகர் சூர்யா முதல் தென்னிந்திய நடிகராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

We’re proud to announce our newly invited members to the Academy!

Meet the Class of 2023: https://t.co/xElbKejirD pic.twitter.com/9IqEmbU6GD

— The Academy (@TheAcademy) June 28, 2023

சினிமா

"தனுஷ் ரசிகர்களே தயாரா?"- அதிரடியான கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

கொண்டாடி கொளுத்தனும் டி.! இணைய தளங்களை அதிரவிடும் ‘நா ரெடி.’ பாடல்.. -  மாஸ் காட்டும் தளபதி விஜய் ரசிகர்கள்..
சினிமா

கொண்டாடி கொளுத்தனும் டி.! இணைய தளங்களை அதிரவிடும் ‘நா ரெடி.’ பாடல்.. - மாஸ் காட்டும் தளபதி விஜய் ரசிகர்கள்..

பத்து நாளில் இத்தனை கோடியா..? வியக்க வைக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் பட வசூல் நிலவரம்..
சினிமா

பத்து நாளில் இத்தனை கோடியா..? வியக்க வைக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் பட வசூல் நிலவரம்..