மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலுவின் PHOTO SHOOT மேக்கிங் வீடியோ!

மாரி செல்வராஜின் மாமன்னன் பட PHOTO SHOOT மேக்கிங் வீடியோ,mari selvaraj in maamannan movie photo shoot making video | Galatta

முதல்முறையாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வைகைப்புயல் வடிவேலு இணைந்து நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் போட்டோ ஷூட் மேக்கிங் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திலிருந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். இதனை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தில் நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்து மாரி செல்வராஜ் உருவாக்கிய கர்ணன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வரிசையில் மாரி செல்வராஜின் மூன்றாவது திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த 2023 ஆம் ஆண்டில் மிக முக்கிய படமாக வெளிவந்துள்ள மாமன்னன் படம் குறித்த முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து இப்போது வரை நாளுக்கு நாள் அது குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். எனவே முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளதால் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம் மாமன்னன் தான். உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலு கதையின் நாயகர்களாக நடித்துள்ள மாமன்னன் படத்தில் புரட்சிகரமான கதையின் தாக்கியதாக கீர்த்தி சுரேஷும் மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாசில் நடித்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு அவர்களை இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட புதிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். 

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மாமன்னன் திரைப்படத்திற்கு மற்றொரு பலமாக இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையை சேர்த்து இருக்கிறார். நீண்ட காலமாக தான் பேச நினைத்த ஒரு சமூக நீதி பிரச்சனையை தரமான அரசியல் படமாக திரை வடிவமாக இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னனை உருவாக்கி இருக்கிறார்.  ஏற்கனவே வெளிவந்த ட்ரெய்லர் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் நேற்று ஜூன் 29ஆம் தேதி ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த மாமன்னன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வெளியான அனைத்து பகுதிகளிலும் திரைப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது மாமன்னன் திரைப்படத்திலிருந்து புதிய வீடியோ ஒன்றை சர்ப்ரைஸாக பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். மாமன்னன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து வெளிவந்த அனைத்து போஸ்டர்களுக்குமான போட்டோ ஷூட் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். வைகைப்புயல் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மாரி செல்வராஜ் இயக்கும் இந்த மாமன்னன் போட்டோ ஷூட் மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த அட்டகாசமான மாமன்னன் போட்டோ ஷூட் மேக்கிங் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

பரபரக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 பட செம்ம ஷூட்டிங் அப்டேட் கொடுத்த காஜல் அகர்வால்! ட்ரெண்டிங் புகைப்படம் உள்ளே
சினிமா

பரபரக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 பட செம்ம ஷூட்டிங் அப்டேட் கொடுத்த காஜல் அகர்வால்! ட்ரெண்டிங் புகைப்படம் உள்ளே

கில்லர் கில்லர் 'கேப்டன் மில்லர்' வரார்!- தனுஷின் அதிரடியான லுக்கில் வந்த கேப்டன் மில்லர் பட மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

கில்லர் கில்லர் 'கேப்டன் மில்லர்' வரார்!- தனுஷின் அதிரடியான லுக்கில் வந்த கேப்டன் மில்லர் பட மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

'உங்கள் வாழ்க்கையில் மாமன்னன் யார்?'- உண்மையை உடைத்த மாரி செல்வராஜ்... தன் தந்தை பற்றி பேசிய ஸ்பெஷல் வீடியோ இதோ!
சினிமா

'உங்கள் வாழ்க்கையில் மாமன்னன் யார்?'- உண்மையை உடைத்த மாரி செல்வராஜ்... தன் தந்தை பற்றி பேசிய ஸ்பெஷல் வீடியோ இதோ!