“என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னன்..” படக்குழுவினரை வாழ்த்திய உலகநாயகன் கமல் ஹாசன்.!

மாமன்னன் படக்குழுவினரை வாழ்த்திய கமல் ஹாசன் வைரல் பதிவு உள்ளே -Kamal haasan wishes to maamannan team | Galatta

தமிழில் புது வரவாக இன்று (ஜூன் 29) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’ . தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களான பரியேரும் பெருமாள், கர்ணன் படத்தையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில்  உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்த்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடதக்கது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆவலை அதிகரித்த மாமன்னன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக் ஓடிக் கொண்டிருக்கிறது. மாமன்னன் படம் குறித்து படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளையும் எதிர்பார்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் படம் வெற்றிபெற ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் “பெரும் பிரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக் கொண்ட கலைஞானி கமல் ஹாசன் சார் அவர்களுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்” என்று புகைப்படங்களுடன்  பதிவிட்டார்.

பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி @ikamalhaasan சார் அவர்களுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன் ❤️. #MAAMANNAN 🤴@RedGiantMovies_ @Udhaystalin pic.twitter.com/eNFtjZ4WIE

— Mari Selvaraj (@mari_selvaraj) June 28, 2023

அதை தொடர்ந்து படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுபூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமல் ஹாசன் சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.

#MAAMANNAN திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் @ikamalhaasan சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.@mari_selvaraj @KeerthyOfficial #Vadivelu @arrahmanpic.twitter.com/kIESbBVfXY

— Udhay (@Udhaystalin) June 28, 2023

இதையடுத்து உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் அப்பதிவினை பகிர்ந்து அதனுடன், “மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள்” என்று தனது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த பதிவு இணையத்தில் ரசிகர்களால்  வைரலாகி வருகிறது.

மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை.
என் கருத்திற்கு வலிமை சேர்க்கும்
மாமன்னனுக்கு வாழ்த்துகள்@Udhaystalin @mari_selvaraj #MAAMANNAN https://t.co/gS0L72GbSv

— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2023

பிரதீப் குமாரின் மயக்கும் குரலில் ‘மரகத மாலை’.. சித்தார்த்தின் 'டக்கர்' படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ சாங்..!
சினிமா

பிரதீப் குமாரின் மயக்கும் குரலில் ‘மரகத மாலை’.. சித்தார்த்தின் 'டக்கர்' படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ சாங்..!

சினிமா

"தனுஷ் ரசிகர்களே தயாரா?"- அதிரடியான கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

கொண்டாடி கொளுத்தனும் டி.! இணைய தளங்களை அதிரவிடும் ‘நா ரெடி.’ பாடல்.. -  மாஸ் காட்டும் தளபதி விஜய் ரசிகர்கள்..
சினிமா

கொண்டாடி கொளுத்தனும் டி.! இணைய தளங்களை அதிரவிடும் ‘நா ரெடி.’ பாடல்.. - மாஸ் காட்டும் தளபதி விஜய் ரசிகர்கள்..