“மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறார்.?”– இயக்குனர் அமீரின் அட்டகாசமான பதில்..

மாமன்னன் படம் குறித்து இயக்குனர் அமீர் வீடியோ உள்ளே - Director Ameer about mari selvaraj maamannan | Galatta

கடந்த ஜூன் 29ம் தேதி உலகமெங்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின். வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமூக அரசியலை பேசும் படமாக வெளியாகியிருக்கும் மாமன்னன் திரைப்படம் அறிவிப்பிலிருந்தே தனி எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. அதன்படி ரசிகர்களின் ஆவலுடன் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு கொண்டு வருகிறது மூன்றாவது நாளாக ரசிகர்களின் ஆரவாரமான கொண்டாட்டத்துடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடம் பெருவாரியான ஆதரவினையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகவும் நல்ல வசூலையும் விமர்சனத்தையும் ஒரு சேர பெற்ற திரைப்படமாகவும் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வந்த இயக்குனரும், நடிகருமான அமீர் அவர்கள்  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவரிடம் பான் இந்திய திரைப்படங்களின் வளர்ச்சி மற்றும் வடசென்னை குறித்து பல கேள்விகள் கேட்கபட்டது, அதில் மாமன்னன் படத்துக்கு சில இடங்களில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இது குறித்த கேட்கையில்,  “திரைப்படங்கள் மூலமாக கருத்துக்களை பதிவு செய்வது தமிழகத்தில் திராவிட கருத்துக்களாக இருந்தாலும், பெரியாரின் கருத்துக்களாக இருந்தாலும் திரைப்படங்கள் மூலமாகத்தான் கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலே தமிழகத்தில் அந்த முறை அதிகமாக உள்ளது.

அதில் மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறார் என்பதை நான் ஏற்கவில்லை. அவர் அந்த சமூகத்தினர் ஒரு 2000 ஆண்டுகளாக அனுபவித்த வலியை திரையின் மூலமாக சொல்ல முயற்சி செய்கிறார். அதே உரிமை அனைவருக்கும் உள்ளது மக்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதை தான் நாம் இப்போது பார்க்க வேண்டும்.. என்பதை தவிர இந்த கருத்தை சொல்லக்கூடாது என்பதல்ல. இது பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாக தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.”  என்றார் இயக்குனர் அமீர்.

மாமன்னன் வெற்றிக்கு பின் தற்போது மாரி செல்வராஜ் அவரது சொந்த தயாரிப்பில் ‘வாழை’ என்ற படத்தை எடுத்து முடித்து தற்போது அந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் கபடி போட்டியயை கதைக்களமாக கொண்டது புது படத்தினை இயக்கவிருக்கிறார். இது மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் உடன் கர்ணன் வெற்றிக்கு பின் கூட்டணி அமைக்கவிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

‘தி கேரளா ஸ்டோரி’ ஒடிடி ரிலிஸ் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்.. – வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

‘தி கேரளா ஸ்டோரி’ ஒடிடி ரிலிஸ் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்.. – வைரலாகும் பதிவு உள்ளே..

சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்..! ரசிகர்களிடமிருந்து குவியும் பாராட்டுகள்..
சினிமா

சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்..! ரசிகர்களிடமிருந்து குவியும் பாராட்டுகள்..

மாமன்னன் முதல் குட் நைட் வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் – அட்டகாசமான பட்டியல் உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

மாமன்னன் முதல் குட் நைட் வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் – அட்டகாசமான பட்டியல் உள்ளே..