முதல் தமிழ் நடிகராக நியூயார்க்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... கலைக்கட்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

நியூயார்க்கின் டைம் ஸ்கொயர் பில் போர்டில் தளபதி விஜய்,vijay becomes first tamil actor on the new york times square | Galatta

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக ஜொலிக்கும் தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயர் பில் போர்டில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனை அடுத்து தனது 67-வது திரைப்படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் நடித்து வரும் தளபதி விஜயின் நடிப்பில் ஆக்சன் படமாக லியோ படம் தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது திரை பயணத்தில் 68 வது படமாக தளபதி விஜய் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிகில் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் கைகோர்க்கும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும் தளபதி 68 திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார். கைதி - விக்ரம் ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அவர்களின் லியோ படத்திற்கு அன்பறிவு சகோதரர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். அதே போல் கைதி - விக்ரம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து லியோ திரைப்படமும் LCUவில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனிடையே தளபதி விஜயின் பிறந்த நாளான வரும் ஜூன் 22 ஆம் தேதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக லியோ திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆகவுள்ளது. “நா ரெடி” என தொடங்கும் அந்த பாடலின் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. எனவே ஜூன் 22 ஆம் தேதி வெளி வரவிருக்கும் அந்த பாடலுக்காகவும் தளபதி விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகவும் ரசிகர்கள் உற்சாகமாக தயாராகி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்திருக்கும் டைம்ஸ் ஸ்கொயர் பில் போர்டில் தமிழ் சினிமாவில் முதல் நடிகராக தளபதி விஜய்யின் ஸ்பெஷல் வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது. தெறி, சர்க்கார், மாஸ்டர், பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய படங்களின் காட்சிகள் இணைந்த அந்த ஸ்பெஷல் வீடியோ தளபதி விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக டைம்ஸ் ஸ்கொயர் பில் போர்டில் ஒளிபரப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் அந்த வீடியோ இதோ…
 

Happy & proud to feature @actorvijay Anna on the prestigious Times Square Billboard @ New York City to kick start birthday celebrations for #Thalapathy by @CanadaVMI 😍😍😍#HBDThalapathyvijay pic.twitter.com/UAOAdYc6ww

— Kartik (@TheVJClan) June 20, 2023

பக்கா மாஸ் படத்தின் டப்பிங்கை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்... அசத்தலான அப்டேட் உடன் வந்த வைரல் புகைப்படங்கள் இதோ!
சினிமா

பக்கா மாஸ் படத்தின் டப்பிங்கை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்... அசத்தலான அப்டேட் உடன் வந்த வைரல் புகைப்படங்கள் இதோ!

ஒரே நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்த பிரபாஸின் ஆதிபுருஷ்... அதிரடியான அதிகாரப்பூர்வ BOX-OFFICE அறிவிப்பு இதோ!
சினிமா

ஒரே நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்த பிரபாஸின் ஆதிபுருஷ்... அதிரடியான அதிகாரப்பூர்வ BOX-OFFICE அறிவிப்பு இதோ!

'தனுஷின் அசுரன் பட வசனம் பேசிய தளபதி விஜய்!'- சாதித்த மாணவர்களை கௌரவித்த விழாவின் வைரல் வீடியோ இதோ!
சினிமா

'தனுஷின் அசுரன் பட வசனம் பேசிய தளபதி விஜய்!'- சாதித்த மாணவர்களை கௌரவித்த விழாவின் வைரல் வீடியோ இதோ!