சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழு கொடுத்த புது சர்ப்ரைஸ்... அதிதி ஷங்கரின் துள்ளனான நடனத்தில் வந்த வைரல் வீடியோ இதோ!

மாவீரன் படக் குழு கொடுத்த வண்ணாரப்பேட்டையில சர்ப்ரைஸ் வீடியோ,Sivakarthikeyan in maaveeran movie special aditi shankar dance video | Galatta

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக் குழு புதிய சர்ப்ரைஸாக அதிதி ஷங்கர் நடனமாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான நடிகை அதிதி ஷங்கர், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். முன்னதாக நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து பல்வேறு பாராட்டுகளை பெற்று ஆஸ்கார் விருதுகளுக்கான போட்டி வரை சென்ற மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப் பயணத்தில் குறிப்பிடப்படும் திரைப்படமாக ஆரம்பம் முதலே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் மாவீரன் திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியப் போதும் அடுத்து வருகிற தீபாவளி வெளியீடாக பக்கா சயின்ஸ் பிக்சன் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக வரவிருக்கும் அயலான் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் SK21 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. 

முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதுவரை மாவீரன் திரைப்படத்திலிருந்து வெளிவந்த ஒவ்வொரு புகைப்படங்களும் சிறு சிறு வீடியோக்களும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் மாவீரன் திரைப்படத்தின் அட்டகாசமான புகைப்படங்கள் வெளிவந்து படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனிடையே மாவீரன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக வண்ணாரப்பேட்டையில எனும் பாடல் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தது.

இந்த பாடலை அறிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்த கலக்கலான புரோமோ வீடியோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டனர். தொடர்ந்து சிவகார்த்திகேயனும் அதிதி ஷங்கரும் அவர்களது சொந்த குரலில் பாடிய இந்த வண்ணாரப்பேட்டையில பாடல் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த வண்ணாரப்பேட்டையில பாடலுக்கு நடிகை அதிதி ஷங்கர் நடனமாடும் புதிய வீடியோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகை அதிதி ஷங்கரின் துள்ளலான நடனத்தில் வெளிவந்திருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

Our gorgeous @AditiShankarofl ‘s energetic hook-step dance for #Vannarapettayile from #Maaveeran🔥

▶️ https://t.co/r8hlijFgGg

🎙️Singers @Siva_Kartikeyan & @AditiShankarofl
🎵A @bharathsankar12 Musical!🥁
✍🏼 Lyricist @YugabhaarathiYb @madonneashwin @iamarunviswapic.twitter.com/BNkEHoe4sp

— Shanthi Talkies (@ShanthiTalkies) June 17, 2023

ஒரே நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்த பிரபாஸின் ஆதிபுருஷ்... அதிரடியான அதிகாரப்பூர்வ BOX-OFFICE அறிவிப்பு இதோ!
சினிமா

ஒரே நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்த பிரபாஸின் ஆதிபுருஷ்... அதிரடியான அதிகாரப்பூர்வ BOX-OFFICE அறிவிப்பு இதோ!

'தனுஷின் அசுரன் பட வசனம் பேசிய தளபதி விஜய்!'- சாதித்த மாணவர்களை கௌரவித்த விழாவின் வைரல் வீடியோ இதோ!
சினிமா

'தனுஷின் அசுரன் பட வசனம் பேசிய தளபதி விஜய்!'- சாதித்த மாணவர்களை கௌரவித்த விழாவின் வைரல் வீடியோ இதோ!

நேற்று லியோ பட நா ரெடி அப்டேட்... இன்று மாணவர்கள் முன் அரசியல் பேச்சு, அட்வைஸ்... விஜயின் மாஸ்டர் பிளான் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

நேற்று லியோ பட நா ரெடி அப்டேட்... இன்று மாணவர்கள் முன் அரசியல் பேச்சு, அட்வைஸ்... விஜயின் மாஸ்டர் பிளான் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ