விறுவிறுப்பான படப்பிடிப்பில் தனுஷின் கேப்டன் மில்லர்.. அப்டேட் கொடுத்த இயக்குனர் – ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

கேப்டன் மில்லரில் நடித்து முடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமார் விவரம் உள்ளே - Captain Miller wrap for Kannada actor Sivaraj kumar | Galatta

தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை தன் வசப்படுத்தி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என்று அசத்தி வருபவர் தனுஷ். தொடர்ந்து மிக முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலகிலும் வரவேற்பை பெற்று வருகிறார். தனுஷ். அதன்படி இந்த ஆண்டு துவக்கத்திலே தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகி மெகா ஹிட் அடித்த வாத்தி திரைப்படம் அவருக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்தது.

அதை தொடர்ந்து தனுஷ் தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் கடந்த 2022 ல் பூஜையுடன் தொடங்கப்பட்டது குறிப்பிடதக்கது. இதை தொடர்ந்து தனுஷ் கையில் வடசென்னை 2 திரைப்படம் வெற்றிமாறன் கூட்டணியில் உள்ளது. மேலும் ராஞ்சனா இயக்குனர் ஆனந்த் ராய் இயக்கத்திலும்  நடிக்கவிருப்பதாக தகவல். பின்னர் தனுஷ் அவர்களின் 50வது திரைப்படம் அவரே இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படம் விரைவில் தொடங்கவிருகின்றனர்,

இதனிடையே தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. ராக்கி மற்றும் சானிக் காகிதம் போன்ற தனக்கென தனி பாணியில் வித்யாசமான ஆக்ஷன் படங்களை இயக்கி வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் உருவாகி வருகிறது. 1930 கதைகளத்தில் நடைபெறும் கதையாக கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய நாகூரான் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.  

தென்காசி  போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இப்படம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தற்போது கேப்டன் மில்லர் காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ட்விட்டர் பக்கத்தில், உங்கள் நடிப்பை பார்க்கும் போதெல்லாம் எங்கள் முகத்தில் புன்னகை இடம்பெறும் சார்.. உங்கள் மனிதத்தன்மை உங்கள் நேர்மறையான எண்ணத்தை நாங்கள் வியந்து பார்த்தோம். உங்களுடன் பணியாற்றியது என் வாழ்நாளில் கிடைத்த மிக சிறந்த அனுபவம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் மாதத்திலும், டீசர் வரும் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என படக் குழுவினர் முன்னதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

We always had all smiles on our faces watching you perform, sir. We are awestruck by your aura and humility. An absolute pleasure and memory of a lifetime working with you. Wrap up for @NimmaShivanna
#CaptainMiller pic.twitter.com/xwkGgvUMLD

— Arun Matheswaran (@ArunMatheswaran) June 19, 2023

உலகநாயகன் கமல் ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘இந்தியன் 2’.. - காஜல் அகர்வால் பகிர்ந்த அட்டகாசமான தகவல்..!
சினிமா

உலகநாயகன் கமல் ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘இந்தியன் 2’.. - காஜல் அகர்வால் பகிர்ந்த அட்டகாசமான தகவல்..!

பிரபாஸ் மார்கெட்டை மேலும் உயர்த்தும் ஆதிபுருஷ்.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் நிலவரத்தை அறிவித்த படக்குழு..
சினிமா

பிரபாஸ் மார்கெட்டை மேலும் உயர்த்தும் ஆதிபுருஷ்.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் நிலவரத்தை அறிவித்த படக்குழு..

“விஜய் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை நட்சத்திரம்.. ஆனால் அரசியல் வருகை..” கல்வி விருது விழா குறித்து கருத்து தெரிவித்த சத்யராஜ்..!
சினிமா

“விஜய் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை நட்சத்திரம்.. ஆனால் அரசியல் வருகை..” கல்வி விருது விழா குறித்து கருத்து தெரிவித்த சத்யராஜ்..!