11 வருடங்களுக்கு பின் பிறந்த முதல் குழந்தை.. அப்பா ஆனார் RRR பட நாயகன் ராம் சரண்.. - குவியும் வாழ்த்துகள்.!

ராம் சரணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது குவியும் வாழ்த்துகள் விவரம் உள்ளே - Actor ramcharan blessed with baby girl | Galatta

பிரபல தெலுங்கு நடிகரின் மகன் ராம் சரண் கடந்த 2007 ல் வெளியான சிறுத்த படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர் தனது இரண்டாவது படமான ராஜாமௌலியின் ‘மகதீரா’ படம் மூலம் தென்னிந்தியா அளவு பிரபலமடைந்தார். அதை தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்கள். ஆக்ஷன் நிறைந்த கமர்ஷியல் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டதையே உருவாக்கி வைத்துள்ளார் ராம் சரண். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர். மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தனி வரவேற்பை பெற்று மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதக்  கூடிய ஆஸ்கர் விருதையும் ஆர் ஆர் ஆர் படம் தட்டி சென்றது. தொடர்ந்து ராம் சரண் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதன்படி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் கேம் செஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் ராம் சரண் -  உபாசனா தம்பதியினருக்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.  கடந்த 2012 ல் அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாவ் சி ரெட்டியின் பேத்தியான உபாசனா வுடன் நடிகர் ராம்சரணுக்கு திருமணம் நடைபெற்றது.  திருமணம் முடிந்து பல ஆண்டு காலம் குழந்தை இல்லை என்று பல விமர்சனங்களை ராம் சரணும் அவரது மனைவியும் சந்தித்து வந்தனர். பிற்போக்குத்தனமான விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல் ராம் சரண் – உபாசனா மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் உபாசனா கர்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி கோலாகலமாக வளைகாப்பு விழாவும் நடைபெற்றது.

தனது கர்ப்ப காலம் குறித்து உபாசனா ஒரு பேட்டியில், “தொழில் ரீதியாக நல்ல இடத்தை இருவரும் பிடித்த பிறகே குழந்தை குறித்து முடிவு செய்ய யோசித்தோம். அதன்படி தற்போது அந்த நிலை வந்துள்ளோம். இதில் மகிழ்ச்சியடைகின்றோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதில் விமர்சனங்களுக்கு பதிலடியாக இருந்தது. ராம் சரண் தற்போது தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் உலகளவில் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு மேலும் மகிழ்ச்சி தரும் அளவு இன்று காலை ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ராம்சரனின் மனைவி உபாசனாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து ராம் சரண் தந்தையும் பிரபல நடிகருமான சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், “லிட்டில் மெகா இளவரசியை வரவேற்கிறேன்..  உனது வருகையால் உனது பெற்றோர் மட்டுமல்லாமல் லச்சணக்கான மெகா குடும்பத்திலும் மகிழ்ச்சியை பரப்பி உள்ளீர். “ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Welcome Little Mega Princess !! ❤️❤️❤️

You have spread cheer among the
Mega Family of millions on your arrival as much as you have made the blessed parents @AlwaysRamCharan & @upasanakonidela and us grandparents, Happy and Proud!! 🤗😍

— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 20, 2023

திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ள இந்த மகிழ்ச்சியான தருனத்தை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடியும் மேலும் திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

பிரபாஸ் மார்கெட்டை மேலும் உயர்த்தும் ஆதிபுருஷ்.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் நிலவரத்தை அறிவித்த படக்குழு..
சினிமா

பிரபாஸ் மார்கெட்டை மேலும் உயர்த்தும் ஆதிபுருஷ்.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் நிலவரத்தை அறிவித்த படக்குழு..

“விஜய் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை நட்சத்திரம்.. ஆனால் அரசியல் வருகை..” கல்வி விருது விழா குறித்து கருத்து தெரிவித்த சத்யராஜ்..!
சினிமா

“விஜய் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை நட்சத்திரம்.. ஆனால் அரசியல் வருகை..” கல்வி விருது விழா குறித்து கருத்து தெரிவித்த சத்யராஜ்..!

“சிகரெட் எடுக்குற சீன் உண்மையிலே நான் சொல்லல..”  சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த திருமலை பட இயக்குனர் ரமணா.. - Exclusive interview உள்ளே..
சினிமா

“சிகரெட் எடுக்குற சீன் உண்மையிலே நான் சொல்லல..” சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த திருமலை பட இயக்குனர் ரமணா.. - Exclusive interview உள்ளே..