பக்கா மாஸ் படத்தின் டப்பிங்கை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்... அசத்தலான அப்டேட் உடன் வந்த வைரல் புகைப்படங்கள் இதோ!

வேதாளம் ரீமேக் போலா ஷங்கர் பட டப்பிங் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்,keerthy suresh started her dubbing for vedalam remake bhola shankar | Galatta

தனது அடுத்த மெகா படமாக நடித்திருக்கும் பக்கா மாஸ் படத்தின் டப்பிங்கை நடிகை கீர்த்தி சுரேஷ் தொடங்கியிருக்கிறார்.தனக்கென தனி பாணியில் தரமான கதாபாத்திரங்களையும் கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2022 ஆம் ஆண்டில் குட்லக் சகி, இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து நடித்த சாணிக் காயிதம், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் மலையாளத்தில் டொமினோ தாமசுடன் இணைந்து நடித்த வாஷி என வெரைட்டியான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். இந்த 2023 ஆம் ஆண்டில் நடிகர் நாணியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 

முன்னதாக முதல் முறை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் ஆகியோரோடு இணைந்து மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூன் 29ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தொடரந்து கீர்த்தி சுரேஷின் அடுத்த படமாக வெளிவர தயாராகி வரும் திரைப்படம் ரகு தாத்தா. தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ்களின் கதாசிரியர் சுமன் குமார் எழுதி இயக்கும் இந்த ரகு தாத்தா திரைப்படத்தை கே ஜி எஃப் மற்றும் காந்தாரா உள்ளிட்ட PAN INDIA திரைப்படங்களை தயாரித்த HOMBALE FILMS  நிறுவனம் தயாரித்துள்ளது. இதுபோக நடிகர் ஜெயம்ரவி உடன் இணைந்து சைரன் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இயக்குனர் கே.சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே தொடர்ந்து வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் திரைப்படம் தான் போலா ஷங்கர். தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான அஜித் குமாரின் வேதாளம் திரைப்படத்தின் நேரடி தெலுங்கு ரீமேக்காக போலா ஷங்கர் திரைப்படம் தயாராகி இருக்கிறது. கதையின் நாயகனாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, கதாநாயகியாக தமன்னா நடித்திருக்கிறார். மேலும் ரகு பாபு, முரளி ஷர்மா, ரவிசங்கர், வெண்ணலா கிஷோர், கிஷாந்த், துளசி, ஸ்ரீமுகி, சத்யா, ரஷ்மி கௌதம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

ஏ கே என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் கிரியேட்டிவ் கமர்சியல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள போலா ஷங்கர் திரைப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்ய மார்த்தாண்ட் . கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். போலா ஷங்கர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது போலா ஷங்கர் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் டப்பிங்கில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களையும் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

Starting the dubbing of #BholaaShankar with @MeherRamesh Anna 😁

Teaser coming to you soon. @KChiruTweets @tamannaahspeaks @iamSushanthA @BholaaShankar @AnilSunkara1 @dudlyraj @ramjowrites @Sekharmasteroff @AKentsOfficial pic.twitter.com/FsCltfZwsQ

— Keerthy Suresh (@KeerthyOfficial) June 17, 2023

நேற்று லியோ பட நா ரெடி அப்டேட்... இன்று மாணவர்கள் முன் அரசியல் பேச்சு, அட்வைஸ்... விஜயின் மாஸ்டர் பிளான் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

நேற்று லியோ பட நா ரெடி அப்டேட்... இன்று மாணவர்கள் முன் அரசியல் பேச்சு, அட்வைஸ்... விஜயின் மாஸ்டர் பிளான் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ

விக்ரம் பிரபு - வாணி போஜனின் ஆக்சன் திரில்லர் பாயும் ஒளி நீ எனக்கு...  கவனம் ஈர்க்கும் அதிரடியான ட்ரெய்லர் இதோ!
சினிமா

விக்ரம் பிரபு - வாணி போஜனின் ஆக்சன் திரில்லர் பாயும் ஒளி நீ எனக்கு...  கவனம் ஈர்க்கும் அதிரடியான ட்ரெய்லர் இதோ!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ வீரன் பட புது ட்ரீட்… சர்ப்ரைஸாக வந்த பப்பர மிட்டா வீடியோ பாடல் இதோ!
சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ வீரன் பட புது ட்ரீட்… சர்ப்ரைஸாக வந்த பப்பர மிட்டா வீடியோ பாடல் இதோ!