தளபதி விஜயின் லியோ படத்துடன் கைகோர்க்கும் முன்னணி நிறுவனம்... ரிலீஸ் குறித்த அதிரடியான மாஸ் அப்டேட் இதோ!

லியோ பட UK ஐரோப்பிய ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய அஹிம்சா என்டர்டைன்மென்ட்,leo movie uk europe release rights bagged by ahimsa | Galatta

தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் UK மற்றும் ஐரோப்பிய ரிலீஸ் உரிமத்தை முன்னணி நிறுவனம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகராக மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட தளபதி விஜய் தனது அடுத்த படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்த தளபதி விஜய் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தளபதி 68 படத்தில் இணைந்திருக்கிறது. முன்னதாக தற்போது தனது திரைப் பயணத்தில் 67-வது திரைப்படமாக தயாராகும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணி இணைந்து இருப்பதாலும், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதாலும் லியோ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. 

அதே போல் விக்ரம் மற்றும் கைதி ஆகிய திரைப்படங்களில் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU யுனிவர்ஸில் தளபதி விஜயின் லியோ படமும் இடம்பெருமா என்ற எதிரப்பார்ப்பிலும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். லியோ படத்தில் தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

முன்னதாக லியோ திரைப்படத்தின் முதல் பாடலாக நா ரெடி எனும் தளபதி விஜயின் பிறந்த நாளான வருகிற ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்காக மிகப்பிரமாண்டமான திட்டங்கள் இருப்பதாக தயாரிப்பாளர் SS.லலித்க்குமார் அவர்கள் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட 3000 மையங்கள் இருக்கும் அமெரிக்காவில் 1500 மையங்களில் லியோ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த பிரம்மாண்ட ரிலீஸுக்கு PHARS FILM Co LLC நிறுவனம் லியோ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றி இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் UK மற்றும் ஐரோப்பிய ரிலீஸ் உரிமத்தை அஹிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றையும் அஹிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ…

 

🙌♥️ We're joining forces once again with #ThalapathyVijay to bring #LEO to UK & Europe! Get set for the most UNFORGETTABLE Indian film release ever. Thanks to @7screenstudio & @PharsFilm for believing in #AhimsaEntertainment 🙏@vithurs_ @deepa_iyer_ @sude_v @actorvijaypic.twitter.com/iIPrgZ0Run

— Ahimsa Entertainment (@ahimsafilms) June 17, 2023

'தனுஷின் அசுரன் பட வசனம் பேசிய தளபதி விஜய்!'- சாதித்த மாணவர்களை கௌரவித்த விழாவின் வைரல் வீடியோ இதோ!
சினிமா

'தனுஷின் அசுரன் பட வசனம் பேசிய தளபதி விஜய்!'- சாதித்த மாணவர்களை கௌரவித்த விழாவின் வைரல் வீடியோ இதோ!

நேற்று லியோ பட நா ரெடி அப்டேட்... இன்று மாணவர்கள் முன் அரசியல் பேச்சு, அட்வைஸ்... விஜயின் மாஸ்டர் பிளான் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

நேற்று லியோ பட நா ரெடி அப்டேட்... இன்று மாணவர்கள் முன் அரசியல் பேச்சு, அட்வைஸ்... விஜயின் மாஸ்டர் பிளான் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ

விக்ரம் பிரபு - வாணி போஜனின் ஆக்சன் திரில்லர் பாயும் ஒளி நீ எனக்கு...  கவனம் ஈர்க்கும் அதிரடியான ட்ரெய்லர் இதோ!
சினிமா

விக்ரம் பிரபு - வாணி போஜனின் ஆக்சன் திரில்லர் பாயும் ஒளி நீ எனக்கு...  கவனம் ஈர்க்கும் அதிரடியான ட்ரெய்லர் இதோ!