இறுதிகட்டத்தை எட்டிய ஜெயம் ரவியின் இறைவன்.. இயக்குனர் கொடுத்த அப்டேட்.! – உற்சாகத்தில் ரசிகர்கள்..

யுவன் புகைப்படத்துடன் இறைவன் அப்டேட் கொடுத்த இயக்குனர் வைரல் பதிவு உள்ளே - Iraivan Director Shares yuvan shankar raja photo | Galatta

தமிழ் திரையுலகில் இளம் புயலாக அறிமுகமாகி சமீபத்தில் வெளியான இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தையடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக பல திரைப்படங்களில் நடித்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி திரைப்பயணத்தில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக மிக சிறப்பாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். இப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மார்கெட் திரையுலகில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தையடுத்து ஜெயம் ரவி பல அட்டகாசமான படங்களில் நடிக்கவுள்ளார். அதன்படி அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சைரன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் ரவியுடன்  நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் வரும் அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜெயம் ரவி இயக்குனர் ராஜேஷ் அவர்களுடன் கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் ‘JR30’ . பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க நட்டி, விடிவி கணேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். அதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி. கே. கணேஷ் தயரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதனிடையே ஜெயம் ரவி என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அஹமத் உடன் கூட்டணி அமைத்துள்ளார். அதன்படி இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘இறைவன்’. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நயந்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஹரி.K.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார். 

இறைவன் படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கும் படக்குழுவினர் தற்போது இறைவன் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இது குறித்து இயக்குனர் அஹமத் ட்விட்டர் பக்கத்தில்,

“இறைவன் படத்திற்காக இசையமைக்கும் வேலையில் என் நண்பரும் லிட்டில் மேஸ்ட்ரோவுமான யுவன் ஷங்கர் ராஜாவுடன்..” என்று குறிப்பிட்டு யுவன் ஷங்கர் ராஜா புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதையடுத்து இறைவன் படத்தின் இறுதிகட்ட வேலை சூடு பிடித்துள்ளது தெரிய வருகிறது. எனவே இறைவன் திரைப்படத்தின் டீசர், பாடல்கள் குறித்த அறிவிப்புகள் வெகு விரைவில் வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் இறைவன் படத்தினை வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

Composing for #iraivan with my friend , little maestro U1❤️ pic.twitter.com/y391D2ZnsE

— Director Ahmed (@Ahmed_filmmaker) June 19, 2023

 

“சார்பட்டா பரம்பரை தியேட்டரில் வராமல் போன காரணம் இது தான்..” உண்மையை உடைத்த பசுபதி.. Exclusive Interview உள்ளே..
சினிமா

“சார்பட்டா பரம்பரை தியேட்டரில் வராமல் போன காரணம் இது தான்..” உண்மையை உடைத்த பசுபதி.. Exclusive Interview உள்ளே..

உலகநாயகன் கமல் ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘இந்தியன் 2’.. - காஜல் அகர்வால் பகிர்ந்த அட்டகாசமான தகவல்..!
சினிமா

உலகநாயகன் கமல் ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘இந்தியன் 2’.. - காஜல் அகர்வால் பகிர்ந்த அட்டகாசமான தகவல்..!

பிரபாஸ் மார்கெட்டை மேலும் உயர்த்தும் ஆதிபுருஷ்.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் நிலவரத்தை அறிவித்த படக்குழு..
சினிமா

பிரபாஸ் மார்கெட்டை மேலும் உயர்த்தும் ஆதிபுருஷ்.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் நிலவரத்தை அறிவித்த படக்குழு..