ஒரே நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்த பிரபாஸின் ஆதிபுருஷ்... அதிரடியான அதிகாரப்பூர்வ BOX-OFFICE அறிவிப்பு இதோ!

பிரபாஸின் ஆதிபுருஷ் படம் ஒரே நாளில் 140 கோடி பாக்ஸ் ஆபீஸில் வசூல்,Prabhas in adipurush movie crossed 140 crores in box office at first day | Galatta

இந்திய சினிமா இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட படைப்பாக நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் அடுத்ததாக கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய கவனத்தை பெற்ற இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பக்கா ஆக்ஷன் படமாக சலார் படத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். ரசிகன்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் சலார் படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸாகிறது. 

தொடர்ந்து சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரைப்படமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ப்ராஜெக்ட் கே படத்திலும் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  பிரபாஸ் உடன் இணைந்து தீபிகா படுகோனே மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிரட்டலான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதற்காக மிகப்பெரிய தொகை கமல்ஹாசன் அவர்களுக்கு சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ராமாயணத்தை கலைக்களமாக கொண்டு பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுரூஷ் திரைப்படம் நேற்று ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. ராகவா எனும் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க ஜானகியாக சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனான் நடித்துள்ளார். மேலும் மிரட்டலான ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ள ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர். இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் திரைப்படத்தை T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

ஆதிபுரூஷ் திரைப்படம் ரிலீஸாகி இருக்கும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கையை ஒதுக்கி இருக்கின்றனர். நேற்று படம் வெளியான போது ஆஞ்சநேயருக்காக ஒதுக்கப்பட்ட அந்த இருக்கைக்கு காவி துணி போற்றப்பட்டு ஆஞ்சநேயர் உருவப்படங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறியது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அடுத்த ஒரு ஹிட்டுக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் நடிகர் பிரபாஸுக்கு ஆதிபுரூஷ் திரைப்படமாவது கை கொடுக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே உலக அளவில் 120 கோடி ரூபாய்க்கு மேல் ஆதிபுரூஷ் வசூல் செய்திருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ஒரே நாளிலேயே ஆதிபுருஷ் திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

Humbled with your love 🙏🏻
A triumph for #Adipurush at the Global Box Office!

Book your tickets on: https://t.co/0gHImE23yj#Adipurush now in cinemas ✨#Prabhas @omraut #SaifAliKhan @kritisanon @mesunnysingh #BhushanKumar #KrishanKumar @vfxwaala @rajeshnair06 @DevdattaGNagepic.twitter.com/O6eOSgMn84

— T-Series (@TSeries) June 17, 2023

விக்ரம் பிரபு - வாணி போஜனின் ஆக்சன் திரில்லர் பாயும் ஒளி நீ எனக்கு...  கவனம் ஈர்க்கும் அதிரடியான ட்ரெய்லர் இதோ!
சினிமா

விக்ரம் பிரபு - வாணி போஜனின் ஆக்சன் திரில்லர் பாயும் ஒளி நீ எனக்கு...  கவனம் ஈர்க்கும் அதிரடியான ட்ரெய்லர் இதோ!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ வீரன் பட புது ட்ரீட்… சர்ப்ரைஸாக வந்த பப்பர மிட்டா வீடியோ பாடல் இதோ!
சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ வீரன் பட புது ட்ரீட்… சர்ப்ரைஸாக வந்த பப்பர மிட்டா வீடியோ பாடல் இதோ!

உதயநிதி ஸ்டாலினின் அதிரடி.. வடிவேலு 2.0..!- மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர் எப்படி இருக்கு? ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் அதிரடி.. வடிவேலு 2.0..!- மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர் எப்படி இருக்கு? ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ