'தனுஷின் அசுரன் பட வசனம் பேசிய தளபதி விஜய்!'- சாதித்த மாணவர்களை கௌரவித்த விழாவின் வைரல் வீடியோ இதோ!

மாணவர்களை கௌரவித்த விழாவில் தனுஷின் பட வசனம் பேசிய தளபதி விஜய்,thalapathy vijay mentioned dhanush in asuran dialog in students meet | Galatta

தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த பொது தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 234 தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை எடுத்த மாணவ மாணவிகளை அவர்களது பெற்றோர்களோடு நேரில் அழைத்து சென்னையின் நீலாங்கரையில் அமைந்திருக்கும் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் அந்த சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்க தொகையை தளபதி விஜய் வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த விழாவில் மேடையில் பேசிய தளபதி விஜய், நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் இடம் பெற்ற பிரபலமான வசனம் ஒன்றை பேசியிருக்கிறார்.

முன்னதாக இந்த விழாவில் மேடையில் பேசிய தளபதி விஜய், வழக்கம் போல் தன் பாணியில், "என் நெஞ்சில் குடியிருக்கும்... இந்த பொது தேர்வில் சாதனை படைத்த என் நண்பா நண்பிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம்!" என பேச தொடங்கினார். “நான் பொதுவாக இசை வெளியீட்டு விழா, விருது விழாக்களில் எல்லாம் பேசி இருக்கிறேன். ஆனால் இது மாதிரி ஒரு விழாவில் இதுதான் முதல் முறை. மனதிற்கு ஏதோ ஒரு பெரிய பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி உணர்கிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். உன்னில் என்னை காண்கிறேன் என்று ஒரு வாக்கியம் இருக்கும். உங்கள் அனைவரையும் பார்க்கும் போது என்னுடைய பள்ளிக்கூட நாட்கள் தான் நினைவுக்கு வந்து செல்கின்றன. நான் உங்களை மாதிரி நன்றாக படிக்கக் கூடிய மாணவன் எல்லாம் கிடையாது. ரொம்ப ரொம்ப அவரேஜ் ஜஸ்ட் பாஸ் செய்யும் ஒரு மாணவன் தான். நான் ஒரு நடிகனாகவில்லை என்றால் அது ஆகியிருப்பேன் இது ஆகியிருப்பேன் ஒரு டாக்டராகி இருப்பேன். என்றெல்லாம் சொல்லி உங்களை போர் அடிக்க நான் விரும்பவில்லை. எனக்கு என்னுடைய கனவு எல்லாம் சினிமா நடிப்புதான் அதை நோக்கி தான் என்னுடைய பயணமும் போகிறது. இது மாதிரி ஒரு விழாவை நடத்துவதற்கு ரொம்ப ரொம்ப முக்கிய காரணம் என்னவென்றால், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் அழகான ஒரு வசனத்தை பார்த்தேன், கேட்டேன், “காடு இருந்தா எடுத்துக்குவானுங்க ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க ஆனா படிப்ப மட்டும் உங்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது” அது மிகவும் பாதித்த ஒரு வசனமாக இருந்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல இதுதான் எதார்த்தமும் கூட... இப்படி ஒரு முக்கியத்துவம் இருக்கும் இந்த கல்விக்கு என் தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்பது ரொம்ப நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்கான நேரம் தான் இது என நான் நினைக்கிறேன். இதற்காக தமிழ்நாடு முழுவதும் உழைத்த ஆசிரியர்கள், ஒவ்வொரு ஊரிலும் இந்த முதல் மூன்று மாணவர்களை கண்டறிந்து இந்த விழாவிற்கு அழைத்து வந்து இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த எனது மக்கள் இயக்கம் நண்பர்களுக்கும், ஆனந்த் அண்ணாவுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தளபதி விஜய் பேசி இருக்கிறார். இன்னும் பல முக்கிய விஷயங்களை பேசிய தளபதி விஜயின் அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.
 

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ வீரன் பட புது ட்ரீட்… சர்ப்ரைஸாக வந்த பப்பர மிட்டா வீடியோ பாடல் இதோ!
சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ வீரன் பட புது ட்ரீட்… சர்ப்ரைஸாக வந்த பப்பர மிட்டா வீடியோ பாடல் இதோ!

உதயநிதி ஸ்டாலினின் அதிரடி.. வடிவேலு 2.0..!- மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர் எப்படி இருக்கு? ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் அதிரடி.. வடிவேலு 2.0..!- மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர் எப்படி இருக்கு? ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ

மிரள வைக்கும் உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு - ஃபகத் பாசலின் நடிப்பு... மாமன்னன் பட மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

மிரள வைக்கும் உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு - ஃபகத் பாசலின் நடிப்பு... மாமன்னன் பட மிரட்டலான ட்ரெய்லர் இதோ!