தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் 2021 பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இதனை அடுத்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.இந்த படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இயக்குகிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.இதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன.

இந்த பூஜையில் படத்தின் முக்கிய பிரபலங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் கலந்துகொண்டனர்.தற்போது இந்த படத்தின் பூஜை குறித்த ஒரு வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விஜய் படக்குழுவினருடன் கலந்துரையாடும் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்