உலக அளவில் பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த கவர்ச்சி நடிகையாக அறியப்படும் நடிகை சன்னி லியோன் தற்போது பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இந்தியத் திரையுலகில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, மலையாளம் & கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். 

முன்னதாக தமிழில் நடிகர் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், அடுத்ததாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் தயாராகி வரும் கொட்டேஷன் கேங் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வீரமாதேவி & ஷெரோ ஆகிய படங்களிலும் சன்னி லியோன் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில்  ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக சன்னிலியோன் நடிப்பில் தமிழில் தயாராகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட்(OMG). VAU மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா மற்றும் சதீஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு & ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குனர் R.யுவன் எழுதி இயக்கியுள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்திற்கு தீபக்.D.மேனன் ஒளிப்பதிவில், அருள்.E.சித்தார்த் படத்தொகுப்பு செய்ய, ஜாவித் ரியாஸ் பாடல்களுக்கு இசையமைக்க, தரண் குமார் பின்னணி இசை சேர்த்துள்ளார். இந்நிலையில் சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…