தமிழ் திரையுலகின் மாஸ்ஸான முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித்குமார். அடுத்ததாக  சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. 

அஜீத் குமாருடன் இணைந்து ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா மற்றும் விஜய் டிவி புகழ் ஆகியோர் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ ப்ராஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

முன்னணி ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள வலிமை திரைப்படத்தின் முதல் பாடலாக “நாங்க வேற மாரி” பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான வலிமை GLIMPSE வீடியோவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக் ரைடிங்கில் மிகவும் ஆர்வமுடைய தல அஜித்குமார் சமீபத்தில் நீண்ட பயணமாக தனது அடுத்த பைக் ரைடிங்கை தொடங்கினார். இந்நிலையில் இந்த பயணத்தின்போது தல அஜித் குமார் பைக் ரைடிங் செய்யும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ட்ரெண்டாகும் இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.