தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு பாக்யராஜ் சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடைசியாக தளபதி விஜயுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகர் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து நடிகை அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிகர் மனோபாலா உடன் இணைந்து இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதை தொடர்ந்து முதல் பாடலாக பாடகர் சிட் ஸ்ரீராம் குரலில் வெளிவந்த ஏதோ சொல்ல பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.பிறகு டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு என்ற இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியானது. விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடகி சிவாங்கி மற்றும் சூப்பர் சிங்கர் சாம் விஷால் இணைந்து பாடிய இந்தப் பாடல் யூட்யூபில் ட்ரண்டானது. இதையடுத்து தற்போது இந்தப் பாடலின் வீடியோ சாங் வெளியீடு குறித்த முக்கியமான தகவல் இன்று வெளியானது.

இசையமைப்பாளர் தரண் குமாரின் இசையில் துள்ளலான பாடலாக உருவாகியுள்ள டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடலின் வீடியோ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக வெளிவந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கண்டு மகிழுங்கள்.