ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர் லிங்குசாமி.முதல் படத்திலேயே பெரும் வெற்றியை பெற்ற இவர் அடுத்ததாக மாதவன் நடித்த ரன் படத்தை இயக்கினார்.இந்த படமும் நல்ல வரவேற்பை பெற தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மாறினார் லிங்குசாமி.

அடுத்ததாக அஜித் நடித்த ஜி,விஷால் நடித்த சண்டக்கோழி,விக்ரம் நடித்த பீமா என்று வெற்றி படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார் லிங்குசாமி.2010-ல் கார்த்தி நடித்த பையா படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் லிங்குசாமி.பையா படம் இயக்குரனாகவும் லிங்குசாமிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து இவர் இயக்கிய வேட்டை படமும் நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்தாக சூர்யாவுடன் இவர் இணைந்த அஞ்சான் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை,இதனால் கடந்த சில வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த லிங்குசாமி,விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நடிக்கும் Ram Pothineni 19 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தில் மாதவன் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் சுற்றி வந்தது.தற்போது அந்த தகவல் வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.