தமிழக சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி முதல் முறையாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. பிக்பாஸின் முதல் வாரத்திலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமீதா மாரிமுத்துவும் அடுத்த வாரத்தில் நாடியா சாங்-கும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதனையடுத்து யூ-ட்யூபர் அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட, கடைசியாக சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் சின்னப் பொண்ணு. கடந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் செண்பகமே செண்பகமே டாஸ்க் நடைபெற்றது. அதிகளவில் சுவாரசியம் இல்லாமல் நகர்ந்து வந்த பிக்பாஸ் வீடு செண்பகமே செண்பகமே டாஸ்க்கிற்குப் பிறகு அதிரடியானது.

முன்னதாக இந்தவார எலிமினேஷன்க்கான நாமினேஷனில் சிபி, பிரியங்கா, நிரூப், அக்ஷரா, பாவணி,மதுமிதா,ஐக்கி பெர்ரி, சுருதி, அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் சுருதி இந்த வார எலிமினேஷனில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிக்பாஸில் சிறப்பாக விளையாடி வரும் சுருதி எலிமினேட் செய்யப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் வாக்குகள் அடிப்படையில் சுருதி எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.இன்றைய நிகழ்ச்சியில் சுருதி வெளியேறுவது ஒளிபரப்பாகும்.