இந்த ஆண்டு தீபாவளியை திருவிழாவாக மாற்றியது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம். முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில் மாஸ் எமோஷ்னல் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்தது. 

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, ஜெகபதி பாபு, சதீஷ், பிரகாஷ்ராஜ், சூரி என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்திருந்தார்.

சூப்பர் ஸ்டாரின் மாஸ்ஸான அதிரடியும், அண்ணன் தங்கை பாசத்தையும்ப் பேசும் அண்ணாத்த திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் சிவா அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்கும் அடுத்த திரைப்படத்தின் முக்கிய தகவலை நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து பேசிய இயக்குனர் சிவா, “அடுத்து நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். தொடர்ந்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்குமார் உடன் இணையும் படங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் உடனும் பணியாற்ற விரும்புகிறேன். அடுத்ததாகஅண்ணாத்த படத்திற்கு பிறகு உடனடியாக ஆரம்பிக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா உடன் பணியாற்றுகிறேன்” என தெரிவித்துள்ளார். எனவே நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா இணையும் புதிய படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.