தமிழ் திரை உலகின் சிறந்த கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 68வது தேசிய திரைப்பட விருதுகளில் 5 விருதுகளை வென்று குவித்தது. முதல்முறையாக நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

முன்னதாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் (2022) வெளிவந்த மாதவனின் ராக்கெட்ரி திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யா, தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். முன்னதாக நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் உட்பட நடிகர்கள் பட்டாளமே நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுதந்திர தின சிறப்புத் திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

நடிகர் சூர்யாவின் பட்டித்தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய "எதற்கும் துணிந்தவன்" வரும் August 14 அன்று மாலை 6.30 மணிக்கு!#WorldTelevisionPremiere #EtharkumThuninthavan #ETOnSunTV @Suriya_offl @priyankaamohan @pandiraj_dir #Sathyaraj @immancomposer @VinayRai1809 @sooriofficial pic.twitter.com/gwPIvX42sy

— Sun TV (@SunTV) August 7, 2022