தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.50 வருடங்களுக்கும் மேலாக தனது படங்கள் மூலம் ரசிகர்களை எண்டெர்டைன் செய்து வருகிறார்.இவரது திரைப்படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா கோலம் கொள்ளும்.பல வருடங்கள் நடித்து வந்தாலும் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக இவரது பட வசூல்கள் இருக்கும்.

தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் 2021 தீபாவளிக்கு திரைக்கு வந்து சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை டாக்டர்,பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.நாளை மறுநாள் வரும் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஜினி ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களை கொண்டாடும் வகையில் அனைவரும் அவரவர் வீட்டில் கோடிகளை ஏற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.நாடு இல்லை என்றால் நாம் இல்லை என்று தெரிவித்துள்ள ரஜினிகாந்த்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்