கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அசத்தி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.இவர் நடித்துள்ள விருமன் படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.இந்த படத்தினை கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

பிரகாஷ்ராஜ்,ராஜ்கிரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.பல இடங்களில் சிறப்பு காட்சிகளுடன் இந்த படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் விநியோகஸ்தரான சக்திவேலன் , இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.முதல் நாளில் 8.2 கோடிகளை குவித்து கார்த்தியின் மிகப்பெரிய ஓப்பனிங்காக அமைந்துள்ளது என தெரிவித்துளளார்.