பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார்.இந்த தொடரை அடுத்து விஜய் டிவியில் ஹீரோயினாக நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தார் ரச்சிதா.சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகினார்.

நடிகரும்,இயக்குனருமான குருப்ரசாத் நடிக்கும் கன்னட படத்தில் ரச்சிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ரச்சிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இது சொல்ல மறந்த கதை தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.

ஜீ தமிழின் செம்பருத்தி தொடரில் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தினார் ரச்சிதா.இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது தேவயானி ஹீரோயினாக நடித்து வரும் புது புது அர்த்தங்கள் தொடரில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.