மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஈரம்,அரவான்,மரகத நாணயம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஆதி.ஹீரோவாக மட்டுமல்லாமல் முக்கிய வேடம்,வில்லன் என்று பல கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ஆதி.

டார்லிங் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி கலகலப்பு 2,மொட்டை சிவா கெட்ட சிவா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிக்கி கல்ராணி,தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து பிரபலமானவராக இருந்தார் நிக்கி கல்ராணி.

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.இதனை தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் காலப்போக்கில் காதலர்களாக மாறினார்கள்.கடந்த மே மாதம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

செம ஜாலியான , செம கலர்புல்லான இந்த திருமணம் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றை நிக்கி கல்ராணி தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கொண்டாட்டமான விசுவல்கள் அடங்கிய இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.முழு வீடியோ எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.