சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் பட ஷூட்டிங் ஓவர்... லைகா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிட்ட அசத்தலான புதிய புகைப்படங்கள் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் பட ஷூட்டிங் ஓவர்,superstar rajinikanth in lal salaam shoot wrapped | Galatta

ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதை கடந்தும் இன்றும் குறையாத வேகத்தோடு தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முதல்முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இணைந்து நடித்த திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மிர்னா மேனன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோவாக ஜெயிலர் ஷோகேஸ் வீடியோ சமீபத்தில் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாளை ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது 

அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 170-வது திரைப்படமாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் #தலைவர்170 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய TJ.ஞானவேல் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படமாக உருவாகும் தலைவர் 171 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தெரிகிறது. இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணையும் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிக மொய்தின் பாய் எனும் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் மற்றும் அதன் அரசியலை மையமாக வைத்த திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  மேலும் கிரிக்கெட் சார்ந்த திரைப்படம் என்பதால் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான கபில் தேவ் அவர்கள் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்டமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருப்பதாகவும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பட குழுவினர் கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்யும் புகைப்படங்களை லைகா வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ… 
 

As the shoot 📽️ of #LalSalaam is completely wrapped, the team get together once again to rejoice it! 🤗✨ Off to the post-production now!#LalSalaam 🫡

🌟 @rajinikanth
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
💫 @TheVishnuVishal & @vikranth_offl
🎥 @DOP_VishnuR
⚒️ @RamuThangrajpic.twitter.com/znDsyIfuzH

— Lyca Productions (@LycaProductions) August 9, 2023