யுவன்-அனிருத் காம்போவில் புது ட்ரீட்… ‘போர்த் தொழில்’க்கு பின் சரத்குமாரின் அடுத்த போலீஸ் அவதாரம்- பரம்பொருள் பட கலக்கல் வீடியோ!

சரத்குமாரின் பரம்பொருள் படத்தின் அடியாத்தி ப்ரோமோ பாடல் வெளியீடு,sarathkumar amithash in paramporul movie promo song out now | Galatta

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் ராக்ஸ்டார் அனிருத் இணைந்து பாடி இருக்கும் சரத்குமார் - அமிதாஷின் பரம்பொருள் படத்தின் ப்ரோமோ பாடலான அடியாத்தி பாடல் தற்போது வெளியானது. தென்னிந்திய சினிமாவில் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து வரும் நடிகர் சரத்குமார் இந்த 2023 ஆம் ஆண்டில் தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ருத்ரன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்த கஸ்டடி ஆகிய படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்தார். மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்த சரத்குமார், கடைசியாக சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் பக்கா க்ரைம் த்ரில்லர் படமாக வெளிவந்த வெளிவந்த போர்த் தொழில் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களின் நடிப்பில் வரிசையாக அட்டகாசமான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. 

முன்னதாக நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து கிரிமினல், துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து நிறங்கள் மூன்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் தனது 150வது திரைப்படமாக உருவாகும் தி ஸ்மைல் மேன் திரைப்படத்திலும் , தொடர்ந்து ஆழி என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்த வரிசையில் சரத்குமார் நடிப்பில் அடுத்த முக்கிய படமாக வரவிருக்கும் படம் தான் பரம்பொருள். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்த நடிகர் அமிதாஷ் உடன் இணைந்து சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் பரம்பொருள் படத்தில் காஷ்மிரா பரதேசி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மனோஜ் மற்றும் கிரிஷ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த பரம்பொருள் திரைப் படத்தை இயக்குனர் C.அரவிந்த்ராஜ் எழுதி இயக்கியுள்ளார். S.பாண்டி குமார் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்திருக்கும் பரம்பொருள் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். பரம்பொருள் திரைப்படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலை கடத்தலை மையப்படுத்திய கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இந்தப் பரம்பொருள் திரைப்படத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். சமீபத்தில் போர் தொழில் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ரசிகர்களை கவர்ந்த சரத்குமார் இந்த பரம்பொருள் திரைப்படத்திலும் மிரட்டரான காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. முன்னதாக வெளிவந்த பரம்பொருள் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள நிலையில், தற்போது பரம்பொருள் படத்தின் ப்ரோமோ பாடலான அடியாத்தி பாடல் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் ராக்ஸ்டார் அனிருத் பாடி இருக்கும் துள்ளளான இந்த அடியாத்தி பாடல் தற்போது ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. பரம்பொருள் படத்தின் ப்ரோமோ பாடலான கலக்கலான அடியாத்தி பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.