வெங்கட் பிரபு படத்திற்காக அணி திரண்ட தனுஷ், யுவன், ஜிவி பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி.. - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தில் பாடும் தனுஷ், யுவன் ஜிவி பிரகாஷ் - Dhanush Yuvan sing tracks in Nanban oruvan vandha piragu movie | Galatta

சமீப காலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பேசப்பட்டு வரும் திரைப்படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த நடிகர் ஆனந்த் முதல் முறையாக இயக்குனராகவும் ஹீரோவாகவும் இப்படத்தில் களமிறங்கவுள்ளார். மசாலா பாப் கார்ன் தயாரிப்பு மற்றும் வைட் பெதர் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஆனந்த் நடிக்க அவருடன் இணைந்து பிரபல யூடியூபர்களான வில்ஸ் பட், ஆர்ஜே விஜய், இர்பான், ஆர்ஜே ஆனந்தி, ஆர் ஜே விஜய், KPY பாலா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நண்பர்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்திற்கு இசையமைப்பாளர் AH காஷிப் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கவிருக்கும் இப்படத்தின் விளம்பரங்கள் சமீப காலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் சினிமாவில் நட்பையும் நண்பர்களையும் கதைகருவாக கொண்டு உருவான படங்களை Re create செய்யும் விதத்தில் நண்பன் ஒருவன் வந்த பிறகு பட நடிகர்கள் வைத்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர், அதன்படி என்றென்றும் புன்னகை, சுப்பிரமணியபுரம், பாய்ஸ், சென்னை 600081, பஞ்சதந்திரம் பட Recreate போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இதையடுத்து படக்குழு படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை வித்யாசமான முறையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் அப்டேட் கொடுத்துள்ளனர். அந்த அப்டேட்டின் படி.

நண்பன் ஒருவன் வந்த பிறகு

பாடகர்கள் : சாம் விஷால், சிவாங்கி கிரிஷ், ஸ்ரீனிஷா ஜெயசீலன், அஜய் கிருஷ்ணா

பாடலாசிரியர் : குமரன் குமணன்

வெட்டி பையன்

பாடகர் : வைசாக்

பாடலாசிரியர் : வைசாக்

 

வரானே

பாடகர் : பாம்பா பாக்யா

பாடலாசிரியர் : குமரன் குமணன்

 

தேடி தேடி தூரம் போகிறேன்

பாடகர் : AH காஷிப்

பாடலாசிரியர் : குமரன் குமணன்

 

பகோடா

பாடகர்  : ஹிப் ஹாப் ஆதி

பாடலாசிரியர் : அசல் கோலார்

 

அவ ஒகே சொல்லிட்டா

பாடகர்கள் : ஜிவி பிரகாஷ் குமார், நகுல் அப்யங்கர்

பாடலாசிரியர் : ஆர் ஜே விஜய்

 

நீ ஏன் தூரம் இருக்கிறாய்

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, அமீனா ரபீக்

பாடலாசிரியர் : மோகன் ராஜா

 

ஆளாதே

பாடகர் : தனுஷ், சாம் விஷால்

பாடலாசிரியர் : ஆர் ஜே விஜய்

கிட்டத்தட்ட 8 பாடல்கள் கொண்ட இப்படத்தின் ஆல்பம் குறித்து படக்குழு வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த சிறப்பு வீடியோவை இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்த சர்ப்ரைஸ் கொடுத்து வரும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.