இறுதிக்கட்டத்தில் ஜெயம் ரவியின் இறைவன் படம்... யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த மாஸான மியூசிக்கல் அப்டேட் இதோ!

ஜெயம் ரவியின் இறைவன் பட மியூசிக்கல் அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா,jayam ravi in iraivan movie re recording update by yuvan shankar raja | Galatta

இயக்குனர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் இறைவன் திரைப்படத்தின் இறுதி கட்ட  ரீ ரெக்கார்டிங் பணிகள் குறித்த முக்கிய தகவல் யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் எல்லமே அனைத்து வயது ரசிகர்களும் குடும்பத்தோடு கொண்டாடும் வகையில் இருப்பது வழக்கம். அந்த வகையில் கடைசியாக சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக மிக சிறப்பாக நடித்து  ஒட்டுமொத்த ரசிகர் பெருமக்களின் மனதையும் வென்றார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வரிசையாக வெளிவந்து மக்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. 

அந்த வகையில் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் சைரன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் & ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தின் 30வது திரைப்படமாக உருவாகும் JR30 படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் தனது 32 வது உருவாகும் ஜீனி படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் . சமீபத்தில் ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் I.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் இறைவன். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இறைவன் திரைப்படத்திற்கு ஹரி.K.வேதாந்த் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிக்கும் இறைவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கும் இறைவன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இறைவன் திரைப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் குறித்த அறிவிப்புகள் வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இறைவன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பின்னணி இசை சேர்க்கும் பணிகளில் தற்போது யுவன் சங்கர் ராஜா முழு கவனம் செலுத்தி வருகிறார். இது குறித்து யுவன் சங்கர் ராஜாவின் குழுவில் இருக்கும் ORCHESTRATOR நிசந்தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறைவன் திரைப்படத்தின்  ரீ ரெக்கார்டிங் பணிகள் நடைபெற்று வரும் புகைப்படங்களை வெளியிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அந்த பதிவு புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by 𝐍 I S H Λ D H Λ N (@nishadhan.s)